ஒரிஜினல் ஐடில வாங்க.. யாருன்னே புரியல.. கெட்ட வார்த்தையில திட்டாதீங்க.. பிரபல நடிகர் கதறல்!

சென்னை: சமூக வலைதளங்களில் தன்னை கன்னாபின்னாவென திட்டித்தீர்க்கும் நெட்டிசன்களுக்கு பிரபல நடிகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் கர்ணன். கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. கர்ணன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது கர்ணன் படம். முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்ததாக தகவல் வெளியானது.

கர்ணனுக்கு பாராட்டு

கர்ணனுக்கு பாராட்டு

மேலும் கர்ணன் படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இப்படம் அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது. இருப்பினும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கர்ணன் படத்தை பாராட்டி வந்தனர்.

நடிகர் நட்டி

நடிகர் நட்டி

மக்கள் மிஸ் பண்ணக்கூடாத படம் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு படத்திற்கு ப்ரொமோஷன் செய்தனர். கர்ணன் படத்தில் தனுஷை தொடர்ந்து நடிகர் நட்டி என்கிற நட்ராஜூம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

போலீஸாக மிரட்டல்

போலீஸாக மிரட்டல்

கண்ணபிரான் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியுள்ளார் நட்ராஜ். ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரியாக சிறப்பாக செய்திருந்தார் நட்ராஜ்.

கெட்ட வார்த்தையில்

கெட்ட வார்த்தையில்

ஆனால் அவரது வில்லத்தனத்தை பார்த்து கடுப்பான ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கன்னாபின்னவென திட்டி தீர்த்து வருகின்றனர். ஃபேக் ஐடியில் இருந்து கெட்ட வார்த்தையிலும் திட்டி வருகின்றனர்.

ஒரிஜினல் ஐடில வாங்க

ஒரிஜினல் ஐடில வாங்க

இதனால் நொந்து போன நடிகர் நட்டி, கெட்ட வார்த்தையில் பேசாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, ஒரு படத்துல நடிக்கிறோம்... அதை விமர்சிக்க பலருக்கு உரிமை உண்டு.. ஆனால் ஒரிஜினல் ஐடில வாங்க.. ஃபேக் ஐடில வராதீங்க.. யாருன்னே புரிஞ்சுக்க முடியல.. ஜாஸ்தியா வேற கமெண்ட் பண்றீங்க.. கெட்ட வார்த்தை வேணாங்க.. என பதிவிட்டுள்ளார்.

அது வெறும் நடிப்புதான்

அது வெறும் நடிப்புதான்

ஏற்கனவே படம் ரிலீஸ் ஆன கையோடு நடிகர் நட்டியை போனில் தொடர்பு கொண்டு ரசிகர்கள் திட்டினர். அப்போது தன்னை திட்டாதீர்கள், அது வெறும் நடிப்புதான் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X