இது தாண்டா என் தலைவன் செல்வாக்கு.. அரச வணக்கம்.. தனி விமானத்தில் பறந்த ரஜினி.. குஷியில் நடிகர்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்ட நிலையில் இதுதான் என் தலைவன் செல்வாக்கு என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல நடிகர்.
ஒளிப்பதிவாளரான நட்டி என்கிற நட்ராஜ், நாளை, சக்கர வியூகம், மிளகா, முத்துக்கு முத்தாக உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் பெரும் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் நட்டி.

கண்ணபிரான்
கடைசியாக அவரது நடிப்பில் கர்ணன் படம் வெளியானது. அப்படத்தில் கண்ணபிரான் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருப்பார் நட்ராஜ். ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரியாக பட்டையை கிளப்பினார் நட்டி.

திட்டும் ரசிகர்கள்
இந்நிலையில் கர்ணன் படத்தில் அவரது வில்லத்தனமான நடிப்பை பார்த்த ரசிகர்கள், அவரை போனில் தொடர்பு கொண்டு திட்டி தீர்த்து வருகின்றனர். இதனால் நொந்து போன நட்டி அது வெறும் நடிப்புதான் தயவு செய்து திட்டாதீர்கள் என கூறினார்.

எல்லாருக்கும் உள்ளே
இந்நிலையில் நடிகர் நட்டி, ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்வது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, ரஜினிகாந்த் எல்லாருக்கும் இருக்கிறார்... ரஜினிகாந்த் எல்லாருக்கும் உள்ளே இருக்கிறார்.. என குறிப்பிட்டுள்ளார்.

என் தலைவன் செல்வாக்கு
இதேபோல் இது தாண்டா என் தலைவன் செல்வாக்கு.. அரச வணக்கம்.. என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் ரஜினிகாந்தைதான் சொல்கிறாரா என குழப்பத்துடன் கேட்டு வருகின்றனர்.

பல உள்ளர்த்தம் இருக்கு
மேலும் அரச வணக்கம்னா Royal salute என்று விளக்கம் கொடுத்துள்ள நடிகர் நட்டி, இதுக்கு பல உள்ளர்த்தம் இருக்கு.. என்றும் பொடி வைத்துள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சொல்வதை தெளிவாக சொல்லுங்கள் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











