தனுஷ் தண்ணீர் போல .. எப்படி வேண்டுமானாலும் நடிப்பார்.. நட்டி புகழாரம் !
சென்னை : தனுஷ் தண்ணீர் போல எப்படி வேண்டுமானாலும் நடிக்க கூடிய திறமைசாலி என்று நட்டி கூறியுள்ளார் .
ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டி கடைசியாக காட்ஃபாதர் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இந்த படத்தில் நட்டியின் நடிப்பு வெகுவாக பாராட்டபட்டது. தற்போது நட்டி சிபிராஜின் வால்டர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் .

நட்டி ஒளிப்பதிவாளராக தனது சினிமா கனவை துவங்கி தாமதமாக தான் நடிக்க வந்தார். இவர் ஹிந்தி தமிழ் என்று பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இவர் நாயகனாக நடிக்க துவங்கிய பின் பல படங்களில் நடித்து விட்டார் இருந்தும் எந்த படத்திலும் கமர்ஷியல் ஹீரோவாக நடிக்கவில்லை ஒவ்வொரு கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் வேறுபாடு காட்டியே நடித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டியில், ஒரு படத்தை பொருத்த வரையில் கதை தான் ஹீரோ. கமர்ஷியல் நடிகராக நடிக்க பலர் இருக்கின்றனர் அதையே நானும் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தார். நட்டி அடிப்படையில் நல்ல ஒளிப்பதிவாளர் தொட்டில் பழக்கம் சாகும் வரை என்று சொல்லும் அளவுக்கு இவர் ஒரு படப்பிடிப்புக்கு சென்றால் எப்படி கேமரா வைக்கபட்டுள்ளது எப்படி லைட்டுகள் வைக்கப்பட்டுள்ளது இதற்கேற்றார் போல எப்படி நடிக்க வேண்டும் என்பதனை படக்குழு சொல்வதற்கு முன்பே தனது அனுபவத்தின் வாயிலாக தெரிந்து கொள்வார்.

காட்ஃபாதர் படத்தில் குழந்தையை காப்பாற்றும் அப்பாவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதற்கு நேர்மாறாக தற்போது வால்டர் படத்தில் குழந்தைகளை கடத்தும் வில்லனாக நடித்திருக்கிறார். நட்டி வால்டர் படத்தை பற்றி கூறும் போது படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது . ஒரு நல்ல அனுபவத்தை சிறந்த பொழுது போக்கும் படமாக எடுத்திருக்கிறார்கள் என்று கூறினார் .

நட்டி தற்போது தனுசின் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் ஒரு தண்ணீர் போல அவரை ஒரு குடுவையிலும் அடைக்கலாம் ஒரு செம்பிலும் வைக்கலாம் எப்படி வேண்டுமானாலும் நடிக்க கூடிய திறமைசாலி என்று நட்டி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











