'இயக்குனர் சுசீந்திரன் என்னை ஏமாற்றி விட்டார்'.... நடிகர் நட்டி நட்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு..!

இயக்குனர் சுசீந்திரன் மீது நடிகர் நட்டி நட்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Recommended Video

நடிகர் நட்டி நட்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | அப்பா வயது ஹீரோவுடன் கள்ளக்காதலா?- வீடியோ

சென்னை: இயக்குனர் சுசீந்திரன் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகர் நட்டி நட்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

மிளகாய், சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோததே, போங்கு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் நட்டி நட்ராஜ். இவர் பிரபல ஒளிப்பதிவாளரும் கூட. தற்போது 'சண்டி முனி' எனும் படத்தில் நாயகனாக நடித்து வரும் நட்டிக்கு, ஜோடியாக மனிஷா யாதவ் நடிக்கிறார்.

Actor Natty Natarajan accusses director Suseenthran

இந்நிலையில், நடிகர் நட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குனர் சுசீந்திரன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது, " நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன். அவர்கள் ஒரு ஏமாற்றுக்காரர்கள். இயக்குனர் சுசீந்திரனும் அவரது மேனேஜர் ஆண்டனியும் என்னை ஏமாற்றிவிட்டார்கள். ஜீவா படத்தில் ஒரு பாடலுக்கு நான் நடித்திருக்கக் கூடாது", என வெவ்வேறு டிவீட்டுகளாக பதவிட்டுள்ளார்.

இதுகுறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரித்த போது, " விஷ்ணு விஷால் நடித்த 'ஜீவா' படத்தில் 'ஒரு ரோசா' என்ற பாடலுக்கு நட்டி நட்ராஜ் நடனம் ஆடியிருந்தார். இந்த படத்துக்கு பேசப்பட்ட பணத்தை சுசீந்திரன் தரவில்லை என தெரிகிறது. இதனால் தான் சுசீந்திரன் மீது நட்டி புகார் கூறியிருக்கிறார்", என்றனர்.

ஜீவா படம் வெளிவந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது ஏன் நட்டி இந்த புகா கூறியிருக்கிறார் என்பது புரியவில்லை. வேறு ஏதேனும் உள்விவகாரம் இருக்குமோ என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறுது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X