சதுரங்க வேட்டை இப்படிப்பட்ட படமா.. நட்டி என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

சென்னை :நட்ராஜ், இஷா நாயர் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2014ல் வெளியான படம் சதுரங்க வேட்டை.

இந்தப் படம் மனிதனின் ஆசையை தூண்டி அதன்மூலம் ஏமாற்றும் வித்தையை மையமாக வைத்து வெளியானது.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் சதுரங்க வேட்டை 2 படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சதுரங்க வேட்டை படம்

சதுரங்க வேட்டை படம்

நடிகர் நட்ராஜ், இஷா நாயர், பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2014ல் வெளியானது சதுரங்க வேட்டை. ஒரு மனிதனின் ஆசையை தூண்டி அதன்மூலம் காசு பார்க்கும் ஏமாற்றுவித்தையை மையமாக வைத்து இந்தப் படம் வெளியானது. ஹெச் வினோத் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது.

சதுரங்க வேட்டை 2 படம்

சதுரங்க வேட்டை 2 படம்

தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் சதுரங்க வேட்டை 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா இணைந்து நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ் ராஜ், நாசர், ராதாரவி மற்றும் யோகிபாபுவும் படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வினோத் இயக்கவில்லை, மாறாக கதை வசனம் எழுதியுள்ளார். சலீம் படத்தை இயக்கிய நிர்மல்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

நீண்ட நாட்களாக இந்தப் படம் ரிலீசுக்காக காத்திருந்தது. பல பிரச்சினைகளை இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தப் படம் சந்தித்துள்ளது. முதல் பாகத்தை தயாரித்த நடிகர் மனோபாலா இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார். அஸ்வின் விநாயகமூர்த்தி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அக்டோபர் 7ம் தேதி ரிலீஸ்

அக்டோபர் 7ம் தேதி ரிலீஸ்

இந்நிலையில் இந்தப் படம் வரும் அக்டோபர் 7ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. முதல் பாகத்தில் சிறப்பான மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார் நட்ராஜ். தற்போது அந்த கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கவுள்ள நிலையில், அவர் ரசிகர்களை கவர்வாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சதுரங்க வேட்டை குறித்து நட்டி

சதுரங்க வேட்டை குறித்து நட்டி

இதனிடையே சதுரங்க வேட்டை ஒரு விழிப்புணர்வு படம் என்று சமீபத்திய பேட்டியில் அந்தப் படத்தின் நாயகன் நட்ராஜ் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் வருவது போன்று தான் யாரிடமும் ஏமாறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தான் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்றும் அதனால் ஏமாற்றங்களை சந்திக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Actor Natty உடன் இணையும் Karthik Raja | New movie pooja | Filmibeat Tamil
தயக்கத்தை போக்கிய இயக்குநர்

தயக்கத்தை போக்கிய இயக்குநர்

இந்தப் படத்தில் நடிக்கத் துவங்கும் முன்பு இந்த கேரக்டரில் எப்படி நடிப்பது என்பது குறித்து தனக்கு தயக்கம் இருந்ததாகவும் ஆனால், தான் இயல்பாக நடித்தாலே போதும் என்ற வினோத் கூறியதாகவும் அதுபோல நடித்துதான் அந்தப் படம் உருவானதாகவும் நட்ராஜ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X