twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீ டூ மாதிரி.. ஜாதி டூன்னு கொண்டு வந்தாங்கன்னா நல்லா இருக்கும்.. நட்டியின் சர்ச்சைக்குரிய ட்விட் !

    |

    சென்னை: மீ டூ மாதிரி ஜாதி டூன்னு கொண்டு வந்தாங்கன்னா நல்லா இருக்கும் என்று நடிகர் நட்டி ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இப்போதுள்ள சூழலில் பெரும்பாலான மக்கள் ஜாதி என்ற ஒன்றை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் ஜாதியை வைத்து செய்யும் கீழ்த்தரமான வேலைகளால் நம்மை நாமே பிரித்து வைத்துக் கொள்ளும் அவநிலை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது எல்லா துறையிலும் உள்ள ஒரு சிலருக்கு பொருந்தும்.

    அதேபோல் கடந்த சில காலங்களாக மீ டூவால் ஊடகம், சினிமா, கலை, இசை என அனைத்துதுறைகளிலும் மீ டூ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சினிமா துறையில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் பொருளாக இருந்தது இந்த மீ டூ.

    5 கல்யாணம் பண்ணினேனா.? மூனுதானே? இன்னும் ஒரு முறை, பிளீஸ் கடவுளே.. திருமண ஆசையில் பிரபல நடிகை! 5 கல்யாணம் பண்ணினேனா.? மூனுதானே? இன்னும் ஒரு முறை, பிளீஸ் கடவுளே.. திருமண ஆசையில் பிரபல நடிகை!

    நடிகரானார்

    நடிகரானார்

    இப்போதுள்ள சூழலில் பெரும்பாலான மக்கள் ஜாதி என்ற ஒன்றை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் ஜாதியை வைத்து செய்யும் கீழ்த்தரமான வேலைகளால் நம்மை நாமே பிரித்து வைத்துக் கொள்ளும் அவலநிலை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது எல்லா துறையிலும் உள்ள ஒரு சிலருக்கு பொருந்தும்.

    மாமன் மச்சான்

    மாமன் மச்சான்

    நம்ம வீட்டு பிள்ளை இவருக்கு நல்ல ஒரு பெயரை வாங்கி கொடுத்தது. அதில் இவர் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கணவராக நடித்திருப்பார். மேலும் இப்படம் சிவகார்த்திகேயனுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே உள்ள பாச போராட்டத்தையும், சிவகார்த்திகேயனுக்கும் நட்டிக்கும் இடையே உள்ள பழைய பகையையும் அதில் உள்ள தவறான புரிதலையும் மிக அழகாக எடுத்துச் சொல்லும் குடும்பப்படமாக வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது இதில் நட்டியும் அந்தக் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

    மீ டூ சர்ச்சை

    மீ டூ சர்ச்சை

    மீ டூ சர்ச்சையில் பொருத்தவரை தமிழ் திரைப்படத்துறையில் பாடகி சின்மயி முதல் வரலட்சுமி, லட்சுமி ராமகிருஷ்ணன் வரை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அதேபோல் ஹிந்தி திரைப்படத்துறையிலும் மீ டூ மூலம் ராதிகா ஆப்தே, ரன்வீர் சிங் போன்ற சில நடிகர்களும், நடிகைகளும் பாதிக்கப் பட்டுள்ளனர் அதை வெளிப்படையாக கூறியும் வருகின்றனர்.

    ஜாதி டூ வரணும்

    ஜாதி டூ வரணும்

    இந்நிலையில் இவர் சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் சர்ச்சைக்குரிய ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில் "மீ டூ மாதிரி ஜாதி டூ ன்னும் கொண்டு வந்தாங்கன்னா. எல்லா ஆண்மகன்களுக்கும் பின்னாடி ஒரு வெப் சீரிசே பண்ணலாம். இது எல்லோருக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன்..." என்று ஜாதியைப் பற்றி பீத்திக் கொள்ளும் சில அரைவேக்காடுகளுக்கு புரியும் வண்ணம் இந்த பதிவை போட்டு இருந்தார்.

    அவங்கள திருத்தவே முடியாது

    அவங்கள திருத்தவே முடியாது

    இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் "அவங்கள திருத்தவே முடியாது சார் அவங்க அப்படித்தான்" என்று அவர் போட்ட பதிவிற்கு ஆதரவு கொடுத்த வண்ணம் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். அதே போல் ஒரு சில பெண்கள் மீ டூ-வை தங்களது சுயலாபத்திற்காக தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என தங்களது ஆதங்கங்களை அங்கு கொட்டி வருகின்றனர். இதே சமயம் நம் நாட்டில் ஜாதி வெறி அரங்கேறுவது போல தற்போது அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது நிறவெறி தாக்குதல் நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனிதனை மனிதனாக பார்ப்போம் மனிதத்தை நேசிப்போம்.

    English summary
    Actor natty posted a controversial post on Twitter
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X