தமிழ் சினிமாவுல அது இருக்கான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு.. பிரபல நடிகர் அதிரடி!
சென்னை: தமிழ் சினிமாவில் குரூபிசம் இருப்பதாக நடிகர் நட்டி தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவரது மரணத்திற்கு பாலிவுட்டில் உள்ள நெபோட்டிசமும் வாரிசு அரசியலுமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெரும் பரபரப்பு
சுஷாந்த் மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் ஹிந்தி திரைப்படங்களில் தான் பணியாற்றக் கூடாது என ஒரு கூட்டம் வேலை பார்ப்பதாக கூறினார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரசூல் பூக்குட்டி
அவரது கருத்துக்கு தமிழ் திரைத்துறையினர் மட்டுமின்றி பாலிவுட் இயக்குநரான சேகர் கபூரும் ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். ஏஆர் ரஹ்மானை தொடர்ந்து ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் ரசூல் பூக்குட்டியும் பாலிவுட் தன்னை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார்.

நடிகர் நட்டி
அடுத்தடுத்து பாலிவுட் சினிமா மீது எழும் குற்றச்சாட்டுக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ் நெபோட்டிசம் குறித்து பேசியுள்ளார். நடிகர் நட்டி சதுரங்க வேட்டை, மிளகாய், நம்ம விட்டுப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

குரூப்பிசம் இருக்கு
அதோடு தமிழ் மற்றும் இந்தி படங்களில் ஒளிபதிவாளராகவும் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நெப்போட்டிசம் குறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க???? என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











