கங்குவா அருமை இப்போ புரியாது.. வாண்ட்டடாக வந்து வண்டியில் ஏறிட்டாரே.. நட்டியை வறுக்கும் நெட்டிசன்ஸ்

சென்னை: சூர்யாவின் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் கங்குவா. ஞானவேல் ராஜா 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.கண்டிப்பாக 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று ரிலீஸுக்கு முன்னதாகவே ஆரூடம் கூறினார் அவர். அதேபோல் சூர்யாவும், படத்தை அனைவரும் வாயை பிளந்து பார்ப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். ஆனால் படம் படு தோல்வியையும், கடுமையான ட்ரோலையும் சந்தித்த சூழலில் நட்டி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

சூர்யாவின் நடிப்பில் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து கடந்த மாதம் வெளியானது கங்குவா திரைப்படம். இந்தப் படத்தை சிவா இயக்கியிருந்தார். அவரது இயக்கம் என்ற அறிவிப்பு வந்தபோதே சூர்யாவின் ரசிகர்கள் கொஞ்சம் அச்சப்பட்டனர். ஏனெனில் இதற்கு முன்பு அவர் இயக்கியிருந்த அண்ணாத்த படத்தின் ரிசல்ட் அப்படி. இருப்பினும் சிவா அஜித்துக்கு கொடுத்த ஹிட்டுகளை போல் சூர்யாவுக்கும் கொடுப்பார் என்ற சின்ன நம்பிக்கையில் அவர்கள் காத்திருந்தார்கள்.

kanguva suriya

பில்டப்புகளின் குடோன்: அந்த நம்பிக்கையை பெரிதாக்கும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் கொடுத்த பேட்டிகளில், படம் கண்டிப்பாக 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று கூறினார். அதுமட்டுமின்றி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், 'இந்த பாஸை பத்திரமாக வைத்திருங்கள். படத்தின் சக்சஸ் மீட்டுக்கு வந்துவிடுங்கள். அனைத்து விநியோகஸ்தர்களும் இங்கு கூடியிருப்பார்கள்’என்று ஓவர் கான்ஃபிடென்ஸோடு பேசினார்.

அதேபோல் சூர்யாவும் தனது பங்குக்கு, 'கங்குவா படத்தை பார்க்கும்போது இப்படியும் படம் எடுக்க முடியுமா என்று அனைவரும் வாயை பிளந்து பார்ப்பார்கள்' என்றும்; கங்குவா நெருப்பு மாதிரி இருக்கும் என்றும் கூறினார். இதன் காரணமாக அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையை தாண்டி அஞ்சான் படத்துக்கு கொடுக்கப்பட்ட பில்டப்புகள் நியாபகத்துக்கு வந்து வயிற்றில் புளியை கரைத்தது. இருந்தாலும் படம் ரிலீஸானபோது ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றார்கள்.

படு தோல்வி: படத்தை பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தனர். படத்தின் மேக்கிங், வசனங்கள், இசை என எதிலும் படம் சரியில்லை என்று ஓபனாகவே கூறினார்கள். அதேசமயம் கங்குவா படத்தை வேண்டுமென்றே தோல்வியடைய வைத்துவிட்டார்கள் என்று தனஞ்ஜெயன் உள்ளிட்டோர் கூறினார்கள். ஆனால் ஒரு படம் நன்றாக இருந்தால் அது தனக்கான வெற்றியை தானே தேடிக்கொள்ளும்; யார் நினைத்தாலும் தோல்வியடைய வைக்க முடியாது என்று விமர்சகர்கள் கூறினார்கள்.

நட்டி சப்போர்ட்: மேலும் நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் கங்குவாவுக்கு சப்போர்ட் செய்து விமர்சனம் செய்தவர்களை விமர்சிக்க; அவரையும் ட்ரோலுக்கு உள்ளாக்கினார்கள் பலர். இதற்கிடையே கங்குவா படத்தின் இரண்டாம் பாகமும் தயாரிப்பில் இருக்கிறது. இந்நிலையில் கங்குவா குறித்து அந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ் பேசுகையில், “கங்குவா படத்தின் முதல் பாகத்தை மட்டும் பார்த்துவிட்டு யாரும் விமர்சனம் செய்வது அவ்வளவு சரியில்லை. இரண்டாவது பாகத்தை பார்த்தால் அனைவருக்கும் பிடிக்கும். கங்குவாவின் அருமை அப்போதுதான் புரியும்” என்றிருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இவர் ஏன் இப்போது வாண்ட்டடாக வந்து வண்டியில் ஏறுகிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X