புகழ் பெற்றவர்கள் வளர்பவர்களை ஆதரியுங்கள்.. சுஷாந்த் மரணம் குறித்து நடிகர் நட்டி ட்வீட்!

சென்னை : பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் இந்தியத் திரையுலகையே புரட்டிப் போட்டு வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக பாலிவுட் கோலிவுட் என அனைத்து திரையுலக கலைஞர்களும் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.

Recommended Video

Even Ulaga Nayagan Kamal Hassan Faced Nepotism

மேலும் இவரின் இறப்பு பல்வேறு சந்தேகங்களையும் பல்வேறு காரணங்களையும் கொண்டிருப்பதால் திரையுலகினர் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதில் தமிழ் நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் புகழ்பெற்ற நடிகர்களுக்கும் திரைப்பட கலைஞர்களுக்கும் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்..

திரைப்படங்களில்

திரைப்படங்களில்

தான் நடிக்கும் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவ்வப்போது சமூகத்திற்காக குரல் கொடுத்து வருபவர் நடிகர் நட்டி. தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் இவர் மிகப்பெரிய முன்னணி கதாநாயகர்களின் பல படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மச்சானாக வந்து மாஸ்

மச்சானாக வந்து மாஸ்

திரைத்துறையில் பன்முகங்கள் கொண்ட நட்டி பாலிவுட்டில் மிகப்பெரிய ஒளிப்பதிவாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒளிப்பதிவாளராக பல படங்களில் இருந்து வரும் இவர் நடிப்பிலும் கை தேர்ந்தவராக இருக்கிறார். இவர் முதன்முதலாக விஜய் நடித்த யூத் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்து செல்வார். இவ்வாறு நடிப்பு வாழ்க்கையை சிறிய இடத்திலிருந்து ஆரம்பித்தவர் பின் மிளகா, முத்துக்கு முத்தாக, சதுரங்கவேட்டை என பல படங்களில் தனது நடிப்பு வேட்டையை ஆரம்பித்து வெற்றிகரமாக வலம் வரும் இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டுப் பிள்ளையில் மச்சானாக வந்து மாஸ் காட்டியிருப்பார். இவ்வாறு ஒளிப்பதிவிலும் நடிப்பிலும் தமிழ் மற்றும் பல மொழிகளில் கொடிகட்டி பறந்து வரும் இவர். அவ்வப்போது சமூக பிரச்சினைகளிலும் தனது கண்டன குரல்களையும் ஆதரவு குரல்களையும் எழுப்பி வருகிறார்.

கண்டன குரல்கள்

கண்டன குரல்கள்

இந்நிலையில் தற்போது இந்திய திரைப்படத் துறையே அதிர்ந்து போயிருக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருப்பது மட்டுமில்லாமல் அவர் தற்கொலைக்கு ஆளாக்கப்பட்டதற்காக கண்டன குரல்களும் பரவலாக எழுந்து வருகிறது. பாலிவுட்டில் பலரும் ஆலியா பட் முதல் கரண் ஜோகர் வரை அனைவரையும் திட்டித் தீர்த்து வரும் வேளையில் நடிகர் நட்டி புகழ்பெற்ற நடிகர் நடிகைகளுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

ஆதரியுங்கள்

ஆதரியுங்கள்

அதில் அவர் கூறியதாவது ஏற்கனவே நடிப்பில் புகழ்பெற்று திரைத் துறையில் வெற்றிகரமாக வந்துகொண்டிருக்கும் "புகழ்பெற்றவர்கள் வளர்பவர்களை ஆதரியுங்கள்.. அவர்கள் போட்டியாளர்கள் அல்ல.. உங்களை அண்ணாந்து பார்த்து ஆச்சர்யப்படுவர்கள்.. நீங்களே அனைத்திற்கும் உதாரணம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் வளரும் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ள இவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்திருக்கின்றனர். மேலும் சுஷாந்த் சிங் பாலிவுட் திரைப்பட துறையால் தொடர்ந்து ஒதுக்கப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலில் தற்கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் வேளையில் இதுபோன்ற தற்கொலைகள் மேலும் நடக்காமல் இருக்க திரைநட்சத்திரங்கள் அனைவரும் தங்களது கண்டனங்களையும் சுஷாந்த் சிங்குக்கு ஆதரவாக பலக் குரல்களையும் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X