சில நடிகைகளுடன் காதலில் விழுந்தது உண்மைதான்.. ஆனால், ரகசிய திருமணம் நடக்கலை.. பிரபல ஹீரோ மறுப்பு!

By

சென்னை: தனக்கு ரகசிய திருமணம் முடிந்துவிட்டதாக வந்த தகவலை பிரபல நடிகர் மறுத்துள்ளார்.

விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நவ்தீப்.

ஆர்யா, பிரகாஷ் ராஜ், சமிக்‌ஷா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, ராஜராஜா இயக்கிய 'இளவட்டம்' படத்தின் ஹீரோவாக நடித்தார்.

நெஞ்சில் சில் சில்

நெஞ்சில் சில் சில்

இதில், ஷீலா ஹீரோயினாக நடித்தார். தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, நெஞ்சில் சில் சில், அ ஆ இ ஈ, அஜித்தின் ஏகன் உட்பட சில படங்களில் நடித்தார். இதற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இது என்ன மாயம்

இது என்ன மாயம்

இந்நிலையில், விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், நடித்த, இது என்ன மாயம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். இருந்தும் வாய்ப்புகள் இல்லை. கடைசியாக ஜீவா நடித்த 'சீறு' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் அஜித்தின் வலிமை படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அவர் அதில் நடிக்கவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

இதற்கிடையே, நடிகர் நவ்தீப் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாயின. இதுபற்றி அவரிடம் கேட்டபோது அதை மறுத்தார். அவர் கூறியதாவது: நான் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். எனக்கு ரகசிய திருமணம் நடந்தது என்று கூறப்படுவதில் உண்மையில்லை.

உண்மையில்லை

உண்மையில்லை

ஆனால், நான் சில முறை காதலில் விழுந்தது உண்மைதான். சிலருடன் டேட்டிங் சென்றிருக்கிறேன். பிரேக் அப்-பும் நடந்திருக்கிறது. எனது திருமணம் தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று என் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறேன். இதற்கு முன்பும் நான் திருமணம் செய்துகொண்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அது எதுவும் உண்மையில்லை' என்று தெரிவித்திருக்கிறார் நவ்தீப்.

Recommended Video

TELUGU FIRST DIRECT OTT MOVIE| DIRECTOR LAKSHMIKANTH INTERVIEW| V-CONNECT| - Filmibeat Tamil
தெலுங்கு நடிகைகள்

தெலுங்கு நடிகைகள்

ஹீரோவாக நடித்து வந்த நவ்தீப், தெலுங்கு சினிமாவிலும் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அலா வைகுந்தபுரம்லோ படத்திலும் நடித்திருந்தார். வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் சில தெலுங்கு நடிகைகளுடனும் டிவி தொகுப்பாளிகளுடனும் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X