தெலுங்கு ஹீரோ நடிக்கிறதா சொன்னாங்களே? அஜித்தின் 'வலிமை'யில் இவர்தான் வில்லனாம்!
சென்னை: அஜித்தின் வலிமை படத்தில் முன்னாள் ஹீரோ, வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். நடிகை ஶ்ரீதேவியின் கணவரும் பிரபல இந்திப் பட தயாரிப்பாளருமான, போனி கபூர் தயாரிக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் அஜித், காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

யாமி, ஹூமா குரேஸி
அஜித் ஜோடியாக, யாமி கவுதம் நடிக்கிறார் என்றும் இலியானா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தில் இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் ரஜினிகாந்தின் காலா படத்தில் நடித்திருந்தார்.

பிரமாண்ட செட்
இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. பின்னர் படக்குழு சென்னை திரும்பியது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரமாண்ட செட் போடப்பட்டு படமாகி வருகிறது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

பிரசன்னா
இதையடுத்து நடிகர் பிரசன்னா நடிப்பதாகக் கூறப்பட்டது. இதை அவரும் எதிர்பார்த்திருந்தார். இந்நிலையில், தான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் நவ்தீப் இதில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. இவர் அஜித்துடன் ஏகன் படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார்.

ஆரம்ப நிலையில்
தமிழில் அறிந்தும் அறியாமலும், இளவட்டம், நெஞ்சில் சில் சில், அ ஆ இ ஈ, உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சீறு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அஜித்தின் 'வலிமை' படத்திலும் இவர் வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், படக்குழு, எல்லாம் ஆரம்ப நிலையில்தான் இருக்கின்றன. இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











