மீண்டும் தலைப்பு செய்தியாகும் பிரபல நடிகரின் குடும்பம்.. பாலியல் தொல்லை கொடுத்ததாக உறவு பெண் புகார்!

சென்னை: தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உறவு பெண் அளித்த புகாரால் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் குடும்பத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் நவாசுதீன் சித்திக் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அடிக்கடி செய்திகளில் சிக்கி வருகிறார். அவரது மனைவியான ஆலியா சித்திக், நவாசுதீன் சித்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமை படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் நவாசுதீன் சித்திக்கிடம் இருந்து விவாகரத்து கேட்டும் அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம்தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

இந்நிலையில் நவாசுதீன் சித்திக்கின் உறவு பெண் ஒருவர், நவாசுதீன் சித்திக்கின் சகோதரரும் தன்னுடைய சித்தப்பாவுமான அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக டெல்லி ஜாமீயா காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கும் அவர் பேட்டியளித்துள்ளார்.

9 வயதில்..

9 வயதில்..

தற்போது டெல்லியில் தனது கணவருடன் வசித்து வரும் அந்த பெண், தன்னுடைய 9 வயதில் நவாசுதீன் சித்திக்கின் சகோதரர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். தனக்கு 2 வயதாக இருக்கும் போதே தனது பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்ததால் தான் தனது அப்பாவுடன் ஸ்டெப் மதர் கண்காணிப்பில் வளர்ந்தேன்.

தவறான தொடுதல்

தவறான தொடுதல்

அப்போது பல சித்ரவதைகளை சந்தித்ததேன். எனது சித்தப்பா எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சொல்ல முடியாத இடங்களில் தொட்டார், முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டார். அப்போது குழந்தையாக இருந்ததால் அது தவறான தொடுதல் என்பது கூட எனக்கு தெரியவில்லை.

வாயை அடைத்துவிட்டார்

வாயை அடைத்துவிட்டார்

நாட்கள் செல்ல செல்லதான் எனக்கு அது புரிந்தது. எனது அப்பாவும் எதுவும் கேட்கவில்லை. எனது பெரியப்பாவான நவாசுதீன் சித்திக்கிடம் கூறினேன். அவர் என்னை புரிந்து கொள்வார் என்று நினைத்தேன். ஆனால் அவர் உன் சித்தப்பா, அவரை பற்றி அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்று என் வாயை அடைத்து விட்டார்.

இப்படி நடந்திருக்காது

இப்படி நடந்திருக்காது

எனது திருமணத்திற்கு பிறகு என்னுடைய மாமனார் மற்றும் மாமியாரை துன்புறுத்துகிறார்கள். என்னுடைய அப்பாவும், பெரியப்பாவும் சேர்ந்து எனது மாமனார் குடும்பத்தினர் மீது பொய்யான புகார்களை அளித்து வருகிறார்கள். அவர்கள் அப்போதே இதனை கண்டித்திருந்தால், இப்போது இப்படி நடந்திருக்காது. நான் தானாக திருமணம் செய்திருக்க மாட்டேன்.

Recommended Video

Petta வில்லன் Nawazuddin க்கு மனைவி விவாகரத்து Notice | Petta, Sacred Games
என்னை நம்பவில்லை

என்னை நம்பவில்லை

அவர்கள் ஒரு போதும் என்னை நம்பவில்லை. இப்போதும் ஒவ்வோரு 6 மாதத்திற்கு ஒரு முறை எனது அப்பா ஏதாவது ஒரு வழக்கை பதிவு செய்து வருகிறார். என்னுடைய இந்த புகாரால் நிச்சயம் என்னை ஏதாவது செய்வார்கள், ஆனால் எனது கணவர் எனக்கு முழு ஆதரவாக உள்ளார். என் மீதான அனைத்து தாக்குதலுக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X