twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல ரஜினி பட நடிகர் நவாஸுதீன் சித்திக்கின் தங்கை 26 வயதில் திடீர் மரணம்.. சோகத்திதில் பாலிவுட்!

    |

    மும்பை: பிரபல இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக்கின் தங்கை சியாமா புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 26.

    நடிகர் நவாஸுதீன் சித்திக் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஆவார். 1999ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார்.

    Actor Nawazuddin Siddiquis sister Syama Tamshi Siddiqui passed away

    அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருந்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார் நவாஸுதீன் சித்திக்.

    இந்நிலையில் நவாஸுதீன் சித்திக்கின் தங்கை ஷியாமா தம்ஷி சித்திக் நேற்று மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நீண்ட ஆண்டுகளாக மார்பக புற்றுநோயுடன் போராடி வந்த அவர் உயிரிழந்தார்.

    ஷியாமாவுக்கு 18 வயதாக இருக்கும் போது அவருக்கு மார்பக புற்றுநோய் இருந்தது தெரியவந்தது. 8 ஆண்டுகளாக நோயிடன் போராடி வந்தார் ஷியாமா.

    ஷியாமா உயிர் பிரியும் போது அவருடைய அண்ணனான நவாஸுதீன் சித்திக் அமெரிக்காவில், நோ லேன்ட்ஸ் மேன் படப்பிடிப்பில் இருந்தார் என தெரிகிறது. இந்நிலையில் அவர் வந்தவுடன் இன்று அவர்களின் சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் புத்தானாவில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நவாஸுதீன் சித்திக் கடந்த ஆண்டு அக்டோபர்13ம் தேதி தனது தங்கையுடன் இருக்கும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அன்று ஷியாமாவின் 25வது பிறந்த நாளை முன்னிட்டு நவாஸுதீன் அந்த பதிவை போட்டிருந்தார்.

    அதில் என்னுடைய தங்கைக்கு மார்பக புற்றுநோய் இருப்பது அவளது 18வது வயதில் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய மனோதைரியமும் துணிச்சலும்தான் அவரை அனைத்து சிரமங்களுக்கு எதிரகாவும் நிற்க வைத்துள்ளது அவளுக்கு இன்று 25வது பிறந்தநாள் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறாள் என பதிவிட்டிருந்தார்.

    ஷியாமாவின் மறைவு நடிகர் நவாஸுதீன் சித்திக்கின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷியாமாவின் மறைவுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Read more about: cinema
    English summary
    Actor Nawazuddin Siddiqui's sister Syama Tamshi Siddiqui, passed away after a long battle with cancer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X