இது ஆரம்பம்தான்.. இன்னும் இருக்கு.. எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் பிரபல நடிகரின் மனைவி!

சென்னை: நவாசுதீன் சித்திக்கின் குடும்பம் பாலியல் புகாரில் சிக்கியுள்ள நிலையில் அவரது மனைவியான ஆலியா அது வெறும் ஆரம்பம்தான் என எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல டிவிட்டியுள்ளார்.

பேட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகர் நவாசுதீன் சித்திக். ஏற்கனவே இவரது முதல் மனைவி விவாகரத்து செய்த நிலையில் ஆலியா என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.

இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆலியா, நவாசுதீன் குடும்பத்தினர் தன்னை கொடுமை படுத்துவதாக கூறி விவாகரத்து கேட்டு வருகிறார்.

ஹாட் டாப்பிக்

ஹாட் டாப்பிக்

கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவிட்டரில் இணைந்த அவர், நவாசுதீன் குடும்பத்தினர் குறித்து அதிர்ச்சி தரும் உண்மைகளை தெரியப்படுத்தப் போவதாக கூறினார். நவாசுதீன் - ஆலியா விவாகரத்து விவகாரம் தான் தற்போது பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

டிவிட்டரில் ஷேர்

டிவிட்டரில் ஷேர்

இந்நிலையில் நவாசுதீனின் சகோதரர் தனது அண்ணன் மகள் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நவாசுதீனின் மனைவி ஆலியா.

வெறும் ஆரம்பம்தான்

வெறும் ஆரம்பம்தான்

மேலும் இது வெறும் ஆரம்பம் தான். ஏற்கனவே இவ்வளவு ஆதரவை அனுப்பிய கடவுளுக்கு நன்றி. இன்னும் பல விஷயங்கள் வெளி வரும். பணத்தால் எவ்வளவு உண்மையயை வாங்க முடியும் என்றும் யாருக்கெல்லாம் அவர்கள் லஞ்சம் கொடுப்பார்கள் என்றும் பார்க்கலாம் என டிவிட்டியுள்ளார்.

பார்ப்போம்..

பார்ப்போம்..

மற்றொரு டிவிட்டில் இந்த குற்றத்தை பார்த்துவிட்டு யார் அமைதியாக இருந்தார்கள் என்பதை காலம் சொல்லும்.
குற்றத்திற்காகவும், புகாரளிக்காததற்காகவும் இறுதியாக யார் தண்டிக்கப்படுகிறார்கள் மற்றும் யார் தப்பிக்கிறார்கள் என்பதையும் பார்ப்போம். ஒரு குழந்தையின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்பை விட கவுரவமும் புகழும்தான் முக்கியமானதாகிவிட்டது. கொடுமை.. எந்த ஆதரவும் இல்லாமல் ஒரு குழந்தை தனக்க நிற்கவேண்டியதாயிற்று என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Petta வில்லன் Nawazuddin க்கு மனைவி விவாகரத்து Notice | Petta, Sacred Games
பெரிய குற்றம்

பெரிய குற்றம்

குழந்தைகளுக்கு கவனிப்பும் ஆதரவும் தேவை. எந்த உதவியற்ற குழந்தையையும் யாரும் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களைக் கொண்ட ஒவ்வொரு நபரும் குற்றத்தைப் புகாரளிக்கத் தவறியதற்காக தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நபர் அல்லது குடும்பத்தின் கவுரவத்தை பாதுகாக்க குற்றங்கள் குறித்து புகாரளிக்காதது ஒரு பெரிய குற்றம் என்றும் நவாசுதீன் சித்திக்கை சாடியுள்ளார் ஆலியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X