விவாகரத்துக்கு இதான் காரணமா.. நடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. தீயாய் பரவும் படுக்கையறை காட்சி!
சென்னை: மனைவி விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில் பிரபல நடிகர் நடிகையுடன் இருக்கும் படுக்கையறை காட்சி வைரலாகி வருகிறது.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்துள்ளார் நவாசுதீன்.
வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார் நவாசுதீன் சித்திக். தமிழில் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மனைவி குற்றச்சாட்டு
இவரது விவாகரத்து கதைதான் பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியுள்ளது. இவரது மனைவி ஆலியா சித்திக் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். கையோடு டிவிட்டரில் இணைந்த அவர், கணவர் குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்.

அதிர்ச்சி உண்மைகள்
பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை சொல்லப் போவதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார். ஏற்கனவே திருமணமான நவாசுதீன் சித்திக் கடந்த 2009ஆம் ஆண்டு ஆலியாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திருமணம் முடித்த நாளில் இருந்தே இருவருக்கும் பிரச்சனைதான் என்று கூறினார் ஆலியா.

வாய் திறக்கவில்லை
மேலும் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளுடன் தான் தனியாக வசித்து வருவதாக கூறிய அவர், நவாசுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் சொல்ல முடியாத அளவுக்கு தன்னை கொடுமை படுத்தியதாக கூறினார். ஆனால் விவாகரத்து குறித்து நவாசுதீன் இதுவரை வாய் திறக்கவில்லை.

படுக்கையறையில் நெருக்கம்
வேறு ஒருவரை காப்பாற்ற, தனக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக நவாசுதீனின் குடும்பத்தினர் கதைக்கட்டி விடுவதாகவும் கூறினார் ஆலியா. இந்நிலையில் நவாசுதீன் சித்திக் படுக்கையறையில் உடலுறவு கொள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சொல்ல முடியாதப்படி..
சாக்ரெட் கேம்ஸ் என்ற வெப் சீரிஸில் இடம் பெற்ற படுக்கையறை காட்சிகள்தான் அவை. நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட அந்த வெப் சீரிஸ் கடந்த 2018ஆம் ஆண்டு ரிலீஸானது. அதில் சொல்ல முடியாத அளவுக்கு நடிகையுடன் நெருக்கமாக நடித்துள்ளார் நவாசுதீன் சித்திக்.

மீண்டும் சூடுபிடித்துள்ளது
இந்த வீடியோவை தற்போது இணையத்தில் பரப்பி விடும் நெட்டிசன்கள், இந்த சம்பவம் தான் விவாகரத்து வரை சென்றிருக்கிறதா என கேட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸான இந்த வெப் சீரிஸ் தற்போது கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட லடாயால் மீண்டும் சூடுபிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











