என்ன செட்டில்மென்ட்டா 30 கோடி ரூபாய் பணம் கேட்டேனா? எல்லாம் பொய்.. கடுப்பாகும் பிரபல நடிகரின் மனைவி!

சென்னை: நடிகர் நவாசுதீனிடம் 30 கோடி ரூபாய் பணமும் 4 பிஹெச்கே வீடும் விவாகரத்து செட்டில்மென்ட்டாக கேட்டதாக வெளியான தகவலை அவரது மனைவி ஆலியா மறுத்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக் ரஜினிக்காந்துடன் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான விவாகரத்து பிரச்சனைதான் இந்தி சினிமாவில் பெரும் சூடான விஷயமாக சென்று கொண்டிருக்கிறது.

விவாகரத்து நோட்டீஸ்

விவாகரத்து நோட்டீஸ்

நவாசுதீன் சித்திக்கும் ஆலியாவும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கிறார் ஆலியா. கடந்த 7 ஆம் தேதி தனது வக்கீல் மூலம் விவாகரத்து நோட்டீஸை நவாசுதீனின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப்புக்கும் ஆலியாவின் வழக்கறிஞர் அனுப்பியுள்ளார்.

ஆண் நண்பருக்காக?

ஆண் நண்பருக்காக?

ஆனால் விவாகரத்து நோட்டீஸ் தொடர்பாக நவாசுதீனின் தரப்பு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் ஆலியா சித்திக் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானது. அவருடன் சேர்ந்து வாழவே ஆலியா, கணவர் நவாசுதீனிடம் இருந்து விவாகரத்து கேட்பதாக தகவல் வெளியானது.

பொய்யான குற்றச்சாட்டு

பொய்யான குற்றச்சாட்டு

ஆனால் இதனை மறுத்த ஆலியா தனக்கு எந்த ஆணுடனும் தவறான தொடர்பும் இல்லை என்றார். மேலும் யாரோ ஒருவரை காப்பாற்ற தன் மீது இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை அபாண்டமாக தன் மீது கூறுவதாக கூறினார். மேலும் நவாசுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்த அதிர்ச்சி உண்மைகளை கூறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

30 கோடி ரூபாய்

30 கோடி ரூபாய்

இந்நிலையில் ஆன்லைனில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ஆலியா அனுப்பிய விவாகரத்து நோட்டீஸின் காப்பி என குறிப்பிடப்பட்டிருந்த அதில், விவாகரத்து தீர்வுக்காக நடிகர் நவாசுதீனிடமிருந்து ஜீவனாம்சமாக 30 கோடி ரூபாய் பணம் மற்றும் 4 பிஹெச்கே பிளாட் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் வதந்தி

வெறும் வதந்தி

மேலும் 2 நிலையான வைப்புத்தொகையாக 20 கோடி ரூபாய் அவர்களின் இரண்டு குழந்தைகளுக்காக ஆலியா கேட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனை முற்றிலும் மறுத்துள்ளார் ஆலியா. இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் அவை எல்லாம் வெறும் வதந்தி. அந்த அறிக்கைகள் புனையப்பட்ட நகல் என தெரிவித்துள்ளார்.

Recommended Video

Petta வில்லன் Nawazuddin க்கு மனைவி விவாகரத்து Notice | Petta, Sacred Games

நிறைய வெளிப்படும்

ஊடங்களில் இருந்து நான் அனுப்பிய நோட்டீஸின் காப்பி இருப்பதாக கூறி எனது வழக்கறிஞர்களுக்கு போன் கால்கள் வருகின்றன. சரிபார்க்கப்பட்டதில் அந்த அறிக்கை ஒரு" புனையப்பட்ட நகல் "என்று தெரிகிறது. இதற்குப் பின்னால் யார் இருப்பார்கள்? ஒருவரை அவமானத்திலிருந்து காப்பாற்ற செய்யும் முயற்சி என வெளிப்படையாக தெரிகிறது இப்போது நிறைய வெளிப்படும் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X