குட்டி நயன்தாரா.. குட்டி விக்னேஷ் சிவன்.. வைரலாகும் வீடியோ !

சென்னை : கொரோனா தொற்று குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குழந்தையாக மாறி ஆடி பதிலடி கொடுத்த குட்டி நயன்தாரா மற்றும் குட்டி விக்னேஷ் சிவன் வைரலாகும் வீடியோ..

Recommended Video

Nayanthara Vignesh வின் நெத்தியடி பதில் | எனக்கு கொரோனாவா

சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என வதந்திகள் வந்த நிலையில் அதை நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் மறுத்து வந்தார்.

இதனால் பீதியில் இருந்த அவரது ரசிகர்களுக்கு ஒரு க்யூட்டான வீடியோ ஒன்றை அனுப்பி அனைவரையும் ரசிக்க வைத்தும் சிரிக்க வைத்தும் வருகின்றனர் இந்த க்யூட் நட்சத்திர கப்புல்.

நடிகர்களுக்கும்

நடிகர்களுக்கும்

கடந்த சில மாதங்களாகவே கொரோனா நோய்த் தொற்றின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டே வருவதால் பரவலாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் பல்வேறு நடிகை நடிகர்களுக்கும் கொரோனா இருப்பதாக வதந்திகள் அவ்வப்போது பரப்பப்பட்டு வருகிறது.

விரைவில்

விரைவில்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா இவர் தற்பொழுது மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்துவருகிறார். ஆர் ஜே பாலாஜி எழுதி இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் இதில் வரும் நயன்தாரா அம்மன் போன்று வேடமிட்டு இருப்பதால் அவரது ரசிகர்கள் பலரும் அந்த போட்டோவை வீட்டில் பூஜை அறையில் வைத்து இருப்பது போல சில மீம்ஸ்களும் வெளியானது.

சமந்தா

சமந்தா

நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து "காத்துவாக்குல ரெண்டு காதல்" என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் சமந்தா மற்றும் நயன்தாரா என இவர்கள் இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகின்ற இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

பொய்யான செய்தி

பொய்யான செய்தி

இந்நிலையில் நயன்தாரா மற்றும் அவரது காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாகவும். இதனால் அவர்கள் இருவரும் தங்களை தனிமை படுத்தி கொண்டதாகவும் பொய்யான செய்திகள் வெளியானது.

நிம்மதி பெருமூச்சு

நிம்மதி பெருமூச்சு

அதற்கு விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்து நாங்கள் இருவரும் நலமுடன் உள்ளோம் எங்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை இது முற்றிலும் வதந்தி, தயவு செய்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்ததை தொடர்ந்து அவரது ரசிகர்கள் நிம்மதியுடன் பெருமூச்சு விட்டனர்

க்யூட்டான

க்யூட்டான

மேலும் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து குழந்தை போல் க்யூட்டான ரியாக்சன்னுடன் பாடல் ஒன்றிற்கு ஆடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் ஐய்..!! குட்டி நயன்தாரா, விக்னேஷ் சிவன் வந்தாச்சு என அந்த வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனர்.

ஆங்கில பாடலுக்கு

ஆங்கில பாடலுக்கு

கொரோனா வதந்தியில் இருந்த அனைவருக்கும் சற்றும் எதிர்பாராத விதமாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ஒரு ஆங்கில பாடலுக்கு குழந்தை போல கியூட்டாக நடனமாடியுள்ளனர். வதந்தியால் பீதியில் இருந்த தனது ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் இருந்த இந்த வீடியோ தற்போது பலராலும் ரசிக்கப்பட்டு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X