பிரபல நடிகர் நெடுமுடி வேணு திடீர் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி.. சமூக வலைதளங்களில் இரங்கல்!
சென்னை: பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார். அவருக்கு வயது 73.
கேரள மாநிலம் திருவனந்தப்புரத்தை சேர்ந்தவர் நடிகர் நெடுமுடி வேணு. நெடுமுடி வேணு 1978ஆம் ஆண்டு சினிமாத்துறைக்கு அறிமுகமானார்.
மலையாள மொழி நடிகரான நெடுமுடி வேணு இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளம் மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் பல படங்கள்
தமிழில் 1995ஆம் ஆண்டு வெளியான மோக முள் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன், அந்நியன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் பொய் சொல்லப் போறோம், சிலம்பாட்டம், சர்வம் தாள மயம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

டிவி சீரியல்களிலும்..
தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார் நெடுமுடி வேணு. சினிமாவுக்கு என்ட்ரி கொடுப்பதற்கு முன்பு ஏராளமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வந்த பிறகு டிவி சீரியல்களிலம் நடித்து வந்தார் நெடுமுடி வேணு.

மூன்று தேசிய விருதுகள்
பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நெடுமுடி வேணு மூன்று தேசிய விருதுகள் மற்றும் ஆறு மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். 73 வயதான நெடுமுடி வேணு, சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டடார். இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நெடுமுடி வேணு கொரோனாவில் இருந்து மீண்டார்.

சிகிச்சைப் பலனின்றி மரணம்
இந்நிலையில், நேற்று திரென அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கேரள மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வந்தன. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.

பிரித்விராஜ் இரங்கல்
அவரது மறைவு மலையாளம் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு தமிழ் மற்றும் மலையாள மொழி சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரித்விராஜ் பதிவிட்டுள்ள இரங்கல் டிவிட்டில், பிரியாவிடை வேணு மாமா! உங்கள் வேலை முறை தலைமுறை தலைமுறைகளுக்கு எப்போதும் ஆராய்ச்சிப் பொருளாக இருக்கும்! அமைதியாக ஓய்வெடுங்கள்! என பதிவிட்டுள்ளார்.

மிஸ் யூ சார்
இதேபோல் நடிகர் சதீஷும் நெடுமுடி வேணுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய நடிகர்களில் சிறந்த நடிகர்.. தங்களுடன் பணி புரிந்தது எங்களின் பாக்கியம்... மிஸ் யூ நெடுமுடி வேணு சார் என பதிவிட்டுள்ளார். இதேபோல் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











