நெல்லை தமிழால் கொள்ளை கொண்டவர்.. 500க்கும் மேற்பட்ட படங்கள்.. மறக்க முடியுமா அந்த காமெடியை?

சென்னை: நெல்லை சிவாவின் திடீர் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது கிணத்தை காணோம் காமெடி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Recommended Video

Pandian Stores Serial நடிகர் Nellai Siva காலமானார்

நடிகர் நெல்லை சிவா நெல்லை மாவட்டம் வேப்பிளங்குளத்தை பூர்விகமாக கொண்டவர்.1985ஆம் ஆண்டு வெளியான ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து மகா பிரபு, வெற்றிக்கொடிக்கட்டு, கண்ணும் கண்ணும் உட்பட தமிழ் சினிமாவில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசனால் ஆர்வம்

சிவாஜி கணேசனால் ஆர்வம்

நெல்லை சிவா நெல்லை ஸ்லாங்கில் பேசும் தமிழே அவரை மற்ற துணை நடிகர்களில் இருந்து வித்தியாசமாக காட்டியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகரான நெல்லை சிவா அவராலேயே சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை கொண்டார்.

பரமபத விளையாட்டு

பரமபத விளையாட்டு

சென்னை வந்த அவருக்கு நடிகர்கள் மன்சூர் அலி கான் மற்றும் போண்டா மணி ஆகியோர் நல்ல நண்பர்களாக இருந்தனர். கடைசியாக நடிகை த்ரிஷாவின் பரமபத விளையாட்டு படத்தில் நடித்தார் நெல்லை சிவா.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

சினிமா படங்கள் மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார் நெல்லை சிவா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வந்தார் நெல்லை சிவா.

கிணத்தை காணோம்

கிணத்தை காணோம்

வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான காமெடிகளில் நடித்துள்ளார் நடிகர் நெல்லை சிவா. கண்ணும் கண்ணும் படத்தில் இடம்பெற்ற இவரது கிணத்தை காணோம் காமெடி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது.

வேலையே வேண்டாம்

வேலையே வேண்டாம்

அந்த படத்தில் போலீஸ்காரராக நடித்திருப்பார் நெல்லை சிவா. அவரிடம் நடிகர் வடிவேலு, தன்னுடைய கிணத்தை காணோம் என புகார் கொடுப்பார். கிணத்தை எப்படி திருடுவார்கள் என மண்டை காயும் நெல்லை சிவா, தனக்கு போலீஸ் வேலையே வேண்டாம் என யூனிஃபார்மை கழட்டி போட்டுவிட்டு செல்வார்.

அண்ணாச்சி தமிழ் நாடு

அண்ணாச்சி தமிழ் நாடு

அவரது இந்த காமெடி பெரும் பிரபலமானது. இதேபோல் ஹோட்டல் நடத்தும் அண்ணாச்சியாக நடித்த நெல்லை சிவா, தன்னிடம் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் கத்தியை காட்டி மிரட்டும் மும்பை பாயிடம், வீச்சருவாளை காட்டி அண்ணாச்சி தமிழ் நாடு என கூறி கெத்து காட்டுவார். அவரது இந்தா காமெடி வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X