இதை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி.. நடிகர் நெப்போலியன் பகிர்ந்த அட்டகாச வீடியோ.. அள்ளும் லைக்ஸ்!
சென்னை: நடிகர் நெப்போலியன் ஷேர் செய்துள்ள பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகர் நெப்போலியன் 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தார். சிறந்த ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் நெப்போலியன்.

குணச்சித்திர வேடங்கள்
நடிகர், அரசியல்வாதி, தொழில் அதிபர் என பல முகங்களை கொண்ட நெப்போலியன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போதும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் நெப்போலியன்.
Happy to revisit this video and thought of sharing it as well! Those were beautiful days of my film career and also as a vice president of #nadigarsangam rajinikanth ikamalhaasan ActorMadhavan #KollywoodCinima pic.twitter.com/Jnw3JMM67b
— Nepoleon Duraisamy (actornepoleon) June 8, 2021
டிவிட்டரில் வீடியோ..
கடைசியாக தமிழில் சுல்தான் படத்தில் நடித்திருந்தார் நெப்போலியன். ட்ராப் சிட்டி, ஒன் மோர் ட்ரீம் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் நெப்போலியன். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நெப்போலியன் தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

விஜயகாந்த் தலைவர்
அதாவது நடிகர் நெப்போலியன் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ அது. அப்போது விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்துள்ளார்.

ரஜினி பாராட்டு
அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சூர்யா, மாதவன், ஷியாம், அஜித், வடிவேலு, ஜோதிகா, மனோரமா, ரோஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் பேசும் ரஜினிகாந்த், நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் துணை தலைவர்கள் சரத்குமார், மற்றும் நெப்போலியன் ஆகியோரை பாராட்டுகிறார்.

வாழ்க்கையின் அழகான நாட்கள்
இந்த வீடியோவை தற்போது ஷேர் செய்துள்ள நெப்போலியன், இந்த வீடியோவை மீண்டும் பார்வையிட்டதில் மகிழ்ச்சி, அதைப் பகிரவும் நினைத்தேன்! அவை எனது திரைப்பட வாழ்க்கையின் அழகான நாட்கள் மற்றும் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











