Don't Miss!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டெவில்ஸ் நைட்: ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நெப்போலியன்!
Recommended Video
அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாலும் அவ்வப்போது தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நெப்போலியன், அடுத்து ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.
கைபா பிலிம்ஸ் தயாரித்துள்ள 'டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்' என்ற படத்தின் மூலம் அவர் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
ஒரு எதிர்நாயகனாக தனது திரைப்பயணத்தைத் துவங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நெப்போலியன், கதாநாயகனாக உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், தனது தளராத முயற்சியால் அரசியலிலும் களம் கண்டு, ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அரசின் சமூகநீதி துறை இணையமைச்சராகவும் உயர்ந்து சாதனை புரிந்தவர்.
இந்தப் படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் என்ற முக்கியமான வேடமேற்றிருக்கிறார்.
குற்றப் பின்னணியுடைய இக்கதைக்கு தனித்துவமான அமானுஷ்யங்கள் திகில் சேர்க்கிறது. இத்திரைப்படத்தை எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் சாம் லோகன் கலேகி இயக்கியுள்ளார். நைன் ரூஜாக தற்காப்புக் கலை வல்லுநர் ஜெஸ்ஸி டீன் நடிக்கிறார். ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஹிப்-ஹாப் பாடகர் எமினெம்மின் இளைய சகோதரர் நாதன் மாதேர்ஸ், இத்திரைப்படத்தின் மூலம் புலனாய்வு அதிகாரியாக அறிமுகமாகிறார். இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தும் உள்ளார் ஸ்விப்ட்டி மக்வே. இத்திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகர் மற்றும் இசை அமைப்பாளரான தேவன் ஏகாம்பரமும் நடிகராக அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவு ஆடி, போர்ப்ஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பரப்படம் தயாரிக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் இஸ்தவன் லேட்டங். அதே உயர்தரத்திலான ஒளிப்பதிவு சாதனங்களை இத்திரைப்படத்திற்கும் உபயோகித்துள்ளதால் தரம் பெரிதும் பேசப்படும் என்கிறார்.
பெண்களை முன்னிலைபடுத்தும் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வரும் இவ்வேளையில், ஒரு க்ரைம்/ அமானுஷ்ய கூட்டணி களமிறங்குகிறது.
கதை இதுதான்:
ஜெஸி ஜென்சென் ஒரு துடிப்பான காவல்துறை அதிகாரி (பில்லி ஜீன் ஃபின்னிக்). ஜெஸி, அயல்நாட்டு இராணுவப்பணியை முடித்துவிட்டு தனது சொந்த ஊரான லேக் ஓரியன் பகுதிக்கு திரும்புகிறார்.
அமைதியான அந்த பகுதியில் நடைபெறும் தொடர் கொலைகளும், விவரிக்க முடியாத அமானுஷ்ய நிகழ்வுகளும் அவரை பெரிதும் பாதிக்கின்றன. விசாரணையை துவக்குகிற அதிகாரி பின்னிக், தனது கேள்விகளுக்கான பதில்களை விட, அதிக கேள்விகளையே எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், தனது மரித்துப் போன நண்பருடைய சகோதரரை எல்லிஸ் (பாபி லேனென்) சந்திக்க, காதல் மலர்கிறது.
விசாரணை வட்டம் விரிவடைந்துச் செல்ல செல்ல, இந்த அசாதாரண நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் நைன் ரூஜ் என்ற ஒரு அமானுஷ்ய சக்தி என்றும் இந்த நிகழ்வுகள் அதன் மறுபிறப்பைச் சுட்டிக்காட்டுவதாகவே உணர்கிறார் அதிகாரி ஃபின்னிக்.
காவல்துறை தலைவரும் (ஜெர்ரி நார்ஷ்), சமூக தலைவர் பாஸ்டர் வில்ஹெம்மும் (ஜான் சி ஃபார்மன்) இந்த கோட்பாடினை உடனடியாக மறுக்கின்றனர்.
நைன் ரூஜ் முதன் முதலாக டெட்ராய்ட்டின் நிறுவனரான அண்டோயின் காடில்லாக் என்பவரை 1700ல் பிரஞ்சு படைகள் இந்த நகரை நிர்மாணிக்க முயலும் போது தாக்கியதாக சொல்கிறார்கள்.
சுமார் முன்னூறு ஆண்டுகளுக்குப் பின், நைன் ரூஜ் மீண்டும் உயிர்த்தெழுந்து பழிவாங்க துடிக்கிறது. டெட்ராய்ட் நகரை அழிவிலிருந்து காப்பதற்கு அதிகாரி ஃபின்னிக் அயராது உழைக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிர்பந்தம் ஏற்படுகிறது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க