Nepoleon: வாவ் அழகு அள்ளுதே.. பிஜி மலைக்கு தனுஷோட பயணமான அக்ஷயா.. அட கூட இவங்களுமா?

டோக்கியோ: நடிகர் நெப்போலியன் -ஜெயசுதா தம்பதியின் மூத்த மகன் தனுஷ் மற்றும் நெல்லையை சேர்ந்த அக்ஷயாவிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜப்பானில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர்கள் தொடர்ந்து அங்கேயே 6 மாதங்கள் இருக்கப் போவதாகவும் தொடர்ந்து அடுத்தடுத்த பயணங்களில் ஈடுபட உள்ளதாகவும் நெப்போலியன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆறு மாதங்கள் கழித்து அமெரிக்கா செல்லும் நெப்போலியன் குடும்பத்தினர் அங்கு மீண்டும் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணத்தை அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்றபடி நடத்த உள்ளதாகவும் முன்னதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஜப்பானில் நெப்போலியன், புதிதாக திருமணமான தனுஷ் மற்றும் அக்ஷயா உள்ளிட்ட குடும்பத்தினர் சுற்றுலா சென்றுள்ளனர்.

nepoleon dhanoosh akshaya

நடிகர் நெப்போலியன்: நடிகர் நெப்போலியன் தமிழில் மிகப் பெரிய ஹீரோவாகவும் வில்லனாகவும் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும் மாஸ் காட்டியவர். தொடர்ந்து அரசியலிலும் கவனம் செலுத்திய இவர் எம்பி ஆகவும் இருந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய மகன் தனுஷின் உடல்நிலை காரணமாக அவரின் சிகிச்சை மற்றும் கல்விக்காக அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலானார். இங்கிருந்த தன்னுடைய சொத்து, புகழ் அனைத்தையும் இங்கேயே விட்டுவிட்டு அமெரிக்காவில் தன்னுடைய மகனுக்காக இவர் செட்டிலானது மிகப்பெரிய கவனத்தை பெற்றது.

தனுஷ் -அக்ஷயா திருமணம்: அமெரிக்காவில் நெப்போலியனின் மகன் தனுஷ் அனிமேஷன் துறையில் படித்து சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அவரது பெயரில் சாஃப்ட்வேர் பிசினஸ் செய்து வருகிறார் நெப்போலியன். மேலும் பல ஏக்கர்களில் விவசாயமும் செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இவரது சொத்து மதிப்பு பலநூறு கோடிகளை தாண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய மகனின் திருமணத்தை ஜப்பானில் வெகு விமரிசையாக நடத்தி முடித்துள்ளார். நெல்லையை சேர்ந்த அக்ஷயா என்பவருடன் தனுஷின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

மவுண்ட் பிஜிக்கு பயணம்: இதில் மீனா, குஷ்பூ, ராதிகா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் திருமணம் குறித்தும், அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்தும் நெப்போலியன் மற்றும் குடும்பத்தினர் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவர்கள் குடும்பத்தினருடன் ஜப்பானின் மவுண்ட் பிஜிக்கு சென்றுள்ளனர். இதன் பயண வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் அக்ஷயா, தனுஷ், நெப்போலியன், அவரது மனைவி ஜெயசுதா, மற்றொரு மகன் குணால் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் காரில் பயணம் செய்வதாக காணப்படுகிறது.

அழகான தருணங்கள்: இதன்போது அக்ஷயா தொடர்ந்து தன்னுடைய அக்மார்க் சிரிப்பை வெளிப்படுத்துவதாகவும் இந்த வீடியோவில் அடுத்தடுத்து காணப்படுகிறது. பயணம் என்பதே சுகமானதுதான், அதிலும் பனிபடர்ந்த இந்த மலைக்கு செல்லும வழியெங்கிலும் சாலையின் இருபுறமும் அடர்ந்த மரங்களுடன் காண அற்புதமாக இருக்கிறது. ஆனால் இந்த பயணத்தை என்ஜாய் செய்யாமல் ஜெயசுதாவோ தொடர்ந்து தன்னுடைய மொபைலில் பிஸியாக இருப்பதாக காணப்படுகிறது. தன்னுடைய மகனை வண்டியில் ஏற்றுவது உள்ளிட்ட விஷயங்களை சிரத்தையாக செய்கிறார் நெப்போலியன். திருமணத்திற்கு பிறகு முதல்முறையாக அக்ஷயா மற்றும் தனுஷ் இந்த இடத்திற்கு செல்லும் நிலையில் அழகான தருணங்களை அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவு கொள்ளும் வகையில் இந்த பயணம் அமையும் என்று எதிர்பார்க்கலாம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X