ரஜினியுடன் சந்திப்பு.. எஜமான் கதை.. ஹாலிவுட் படம்.. நெப்போலியன் என்ட்ரி எதற்காக?

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் நெப்போலியன் பதிவிட்டுள்ளார்.

மேலும், எஜமான் படத்துல ரஜினியுடன் நடிச்சு 28 வருஷம் ஆகுது என்றும், அது தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு என்றும் பதிவிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என 5 மொழிகளில் நடித்துள்ள நெப்போலியன், தற்போது, ஹாலிவுட் படங்களில் கலக்கி வருகிறார்.

மறக்க முடியுமா..

மறக்க முடியுமா..

ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, கிழக்குச் சீமையிலே, விருமாண்டி, தென்காசி பட்டினம் என பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் நெப்போலியனை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். ஹீரோவாக நடித்து வந்த நெப்போலியன், எஜமான் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளர்.

வல்லவராயன்

வல்லவராயன்

ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் 1993ம் ஆண்டு வெளியான ரஜினியின் எஜமான் படத்தில், வல்லவராயன் எனும் மாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருப்பார். திருமண வீடானாலும், சாவு வீடானாலும், மாலை, முதல் மரியாதை தனக்குத் தான் வரணும் என அப்போதே கெத்து காட்டி மிரட்டியிருப்பார்.

ஹாலிவுட் படங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல இந்திய மொழி படங்களில் நடித்த நெப்போலியன், டெவில்ஸ் நைட் மற்றும் கிறிஸ்துமஸ் கூப்பன் என இரு ஹாலிவுட் படங்களிலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். கிறிஸ்துமஸ் கூப்பன் படத்தின் டிரைலரில் நெப்போலியன் வரும் காட்சிகளுக்காகவே அந்த டிரைலரை தமிழ் ரசிகர்கள் பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரஜினியுடன்

நீண்ட நாட்களுக்கு பிறகு, தமிழில் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்துள்ள நெப்போலியன், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் ரஜினியுடன் எடுத்த புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும், தனது நடிப்பில் உருவாகி உள்ள ஹாலிவுட் படமான Christmas Coupon டிரைலர் வெளியீட்டிற்கான சந்திப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கம்

அரசியல் நோக்கம்

நெப்போலியன் நாடகத்தில் அசத்தலாக நடித்த குமரேசன் துரைசாமி பின்னர், நெப்போலியன் என்ற பெயரிலையே சினிமாவில் அறிமுகமானார். ஹீரோ, வில்லன் என பல படங்களில் அசத்திய நெப்போலியன் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். தற்போது, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளது வெறும் சினிமாவுக்கு மட்டுமா அல்லது அரசியல் நோக்கம் இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X