Nepoleon: ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நெப்போலியன்.. எல்லாத்துக்கும் அவர்தான் காரணமாம்!
டோக்கியோ: நடிகர் நெப்போலியன் பாரதிராஜாவின் படங்களில்தான் முதலில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியுள்ளார். பாரதிராஜா தான் நெப்போலியன் என்ற பெயரை அவருக்கு வைத்துள்ளார். சினிமா, அரசியல் என தன்னை சிறப்பாக மிகவும் பிசியாக வைத்திருந்த நெப்போலியன், ஒரு கட்டத்தில் அனைத்தையும் விட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகியுள்ளார்.
தன்னுடைய மகனுக்காக மட்டுமே அமெரிக்காவில் செட்டிலாகும் முடிவை தான் எடுத்ததாக நெப்போலியன் தெரிவித்துள்ளார். இது ஏதோ மிகப்பெரிய விஷயம் என்று அனைவரும் பாராட்டுவதாகவும் ஆனால் தான் தன்னுடைய கடமையை மட்டுமே செய்ததாகவும் தன்னுடைய மகனின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

நடிகர் நெப்போலியன்: நடிகர் நெப்போலியன் மற்றும் அவரது மகனின் திருமணம்தான் தொடர்ந்து டாக் ஆஃப் தி டவுனாக காணப்படுகிறது. தன்னுடைய நடிப்பு மற்றும் அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு தன்னுடைய மகனின் விருப்பத்திற்காக அவரது சிகிச்சைமற்றும் படிப்பிற்காக அமெரிக்காவில் செட்டில் ஆனார் நெப்போலியன். நம்பிக்கையுடன் அமெரிக்கா சென்ற நெப்போலியன் தற்போது சொந்த வாழ்க்கையிலும் பிசினசிலும் சாதித்து காட்டியுள்ளார். தன்னுடைய முதல் படத்திற்காக 1000 ரூபாய் சம்பளமாக வாங்கிய அவர், தற்போது கோடிக்கணக்கில் தன்னுடைய ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கி வருகிறார்.
நெப்போலியன் மகன் திருமணம்: கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னுடைய மகன் தனுஷிற்கு திருமணமும் நடத்தி முடித்துவிட்டார். இந்நிலையில் அடுத்தடுத்த பேட்டிகளை தன்னுடைய மனைவியுடனும் தனியாகவும் கொடுத்து வருகிறார் நெப்போலியன். தன்னுடைய முதல் படத்திலேயே இயக்குநர் பாரதிராஜாவின் டைரக்ஷனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து உற்சாகம் தெரிவித்துள்ள நெப்போலியன், அவர்தான் தனக்கு பெற்றோர் வைத்த குமரேசன் என்ற பெயரை நெப்போலியன் என்று வைத்ததாகவும் சீக்ரெட் பகிர்ந்துள்ளார். நெப்போலியன் என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற பெயராக இருந்தபோதிலும், அனைவரும் மதுவின் பிராண்ட் என தன்னை கேலி பேசியதாக தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டில் நடித்துள்ள நெப்போலியன்: ஆனால் தன்னை கேலி பேசியவர்களை சமாளிக்கும்வகையில், தான் ஹாலிவுட்டிலும் நடிக்க வேண்டும் என்பதற்காகவே பாரதிராஜா இந்த பெயரை தனக்கு வைத்துள்ளதாக பேசியுள்ளார். ஆனால் அவர் விளையாட்டாக பேசிய அந்த வார்த்தைகள் தற்போது பலித்துள்ளதாகவும் நெப்போலியன் பேசியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டிலிருந்து தான் 4 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளதாகவும் ஆனால் தன்னுடைய பெயரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் நெப்போலியன் உற்சாகம் தெரிவித்துள்ளார். இதற்கெல்லாம் பாரதிராஜாதான் காரணம் என்றும் அவர் வைத்த பெயர்தான் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நெப்போலியன் பெயர் வைத்த பாரதிராஜா: முன்னதாக தன்னுடைய பெயரை மாற்ற வேண்டி, தனக்கு பிடித்த 25 பெயர்களை எழுதி எடுத்துவர சொல்லி பாரதிராஜா கூறியதாகவும் தானும் 25 பெயர்களை எழுதி எடுத்து சென்ற நிலையில், அவையெல்லாம் பிடிக்கவில்லை என்று கூறி, நெப்போலியன் என்ற பெயரை தனக்கு வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து தன்னிடம் பெயர் பிடிக்கவில்லையா என்று அவர் கேட்டதாகவும், அவ்வளவு பெரிய இயக்குநர் என்பதால் அவர் பார்த்து எதை வைத்தாலும் ஓகே என்று தான் கூறியதாகவும் நெப்போலியன் மேலும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications