Nepoleon: ஜப்பானில் 4 மடங்கு திருமண செலவு.. அமெரிக்காவில் மறுபடி திருமணம்.. நெப்போலியன் ஓபன்!

டோக்கியோ: நடிகர் நெப்போலியன் -ஜெயசுதா தம்பதியின் மூத்த மகன் தனுஷின் திருமணம் கடந்த 7ம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த அக்ஷயா என்பவரை தனுஷ் திருமணம் செய்த நிலையில் இந்த திருமணத்திற்காக மீனா, குஷ்பூ, ராதிகா, சரத்குமார், கார்த்தி, பாண்டியராஜன் என தமிழகத்தின் முன்னணி பிரபலங்கள் ஜப்பான் சென்றிருந்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவை விட ஜப்பானில் திருமண செலவுகள் நான்கு மடங்கு அதிகம் என்று நெப்போலியன் தன்னுடைய பேட்டியொன்றில் கூறியுள்ளார். தன்னுடைய மகனின் திருமணம் நடந்த நிலையில் மிகவும் நெகிழ்ச்சியுடன் அவர் ஆனந்த கண்ணீர் விட்டதை பார்க்க முடிந்தது. ஆனால் அவரது மனைவி போல்டாக திருமண வேலைகளை செய்துக் கொண்டிருந்தார்.

nepoleon jayasudha dhanoosh

நடிகர் நெப்போலியன்: நடிகர் நெப்போலியன் -ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் அவருக்கு உள்ளனர். இதில் மூத்த மகனுக்கு தான் கடந்த 7ம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சிறுவயதில் நன்றாக ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு முடங்கிய நிலையில் அவரது சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார் நெப்போலியன். தான் நடித்து வந்த படங்கள் மற்றும் அரசியல் என அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு அவர் அமெரிக்காவில் செட்டிலானார்.

ஜப்பானில் தனுஷ் திருமணம்: ஆனால் அமெரிக்கா சென்றும் நெப்போலியன் சும்மா இருக்கவில்லை. தன்னுடைய மகன் பெயரில் சாஃப்ட்வேர் பிசினஸ் செய்து அதிரடியாக ஜெயித்து காட்டியுள்ளார். இந்நிலையில் தற்போது தனுஷின் திருமணம் தான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது. இந்த திருமணத்தின் மூலம் ஏராளமான நபர்களை அவர் வியப்புக்கு உள்ளாக்கியுள்ளார். நெல்லையை சேர்ந்த அக்ஷயா என்பவருடன் தனுஷிற்கு ஜப்பானில் திருமணம் நடந்த நிலையில் இந்த திருமணத்தை மிகப்பெரிய அளவில் வெகு விமரிசையாக நடத்தி முடித்துள்ளார் நெப்போலியன். அமெரிக்காவில் வசித்து வந்தாலும் தன்னுடைய மகனின் விருப்பத்திற்காக ஜப்பானில் இந்த திருமணத்தை நெப்போலியன் நடத்தியுள்ளார்.

அசத்திய நெப்போலியன்: தனுஷின் ஃபேவரைட் நாடான ஜப்பானில் அவரது விருப்பத்திற்கு ஏற்ப இந்த திருமணத்தை நடத்தியுள்ளார். திருமணத்தில் தமிழ் சினிமாவின் மீனா, குஷ்பூ, ராதிகா, சரத்குமார், பாண்டியராஜன் கார்த்தி உள்ளிட்ட அனைவரும் ஜப்பானுக்கு நேரில் சென்று மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் ஹல்தி, சங்கீத், மெஹந்தி என அடுத்தடுத்த கொண்டாட்டங்களுடன் நடந்து முடிந்த இந்த திருமணத்தில் செட்டிநாடு சமையல் உள்ளிட்ட தென்னிந்திய சமையல் டிஷ்களை பரிமாறி விருந்தினர்களை அசத்தியுள்ளார் நெப்போலியன். ஜப்பானில் இந்த திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்காக வந்த திரைப் பிரபலங்கள், உறவினர்கள் என அனைவருக்கும் தங்கும் ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார். 5 ஸ்டார் ஹோட்டல்களில் அவர்களுக்கு ரூம் புக் செய்யப்பட்டிருந்தது.

நான்கு மடங்கு செலவு: இந்நிலையில் இந்த திருமணத்திற்காக நான்கு மடங்கு அதிகமாக செலவு செய்துள்ளதாக நடிகர் நெப்போலியன் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியாவை விட அமெரிக்காவில் திருமணத்தை நடத்துவது அதிகமாக செலவை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள நெப்போலியன், அமெரிக்காவைக் காட்டிலும் ஜப்பானில் திருமண செலவு நான்கு மடங்காக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் தன்னுடைய மகனின் விருப்பத்திற்காக இதை செய்ததாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ஆறு மாதங்கள் டூரில் இருக்கும் தாங்கள், இதையடுத்து அமெரிக்கா சென்று அங்குள்ள சட்ட திட்டத்திற்கு ஏற்றபடி மீண்டும் தனுஷிற்கு திருமணத்தை நடத்த வேண்டி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷிற்காக தான்: இதனால் இந்த திருமண செலவு இன்னும் நீண்டு கொண்டே போவது தெரியவந்துள்ளது. இது குறித்து அவருடன் இணைந்து பேட்டி கொடுத்த நெப்போலியனின் மனைவி ஜெயசுதாவும் இவை அனைத்தும் தன்னுடைய மகன் தனுஷின் விருப்பத்திற்காக நடந்ததாக கூறியுள்ளார். அவர்களது இந்த பாசம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் நெகிழச் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X