Actor Nepoleon: கமல்ஹாசனின் படத்தில் நடிக்க மறுத்த நெப்போலியன்.. அட இப்படி ஒரு சம்பவம் நடந்துருக்கா?

டோக்கியோ: நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜப்பானின் டோக்கியோவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய மகனின் சிகிச்சை மற்றும் விருப்பத்திற்காக அமெரிக்காவில் செட்டில் ஆன நெப்போலியன் அவரின் விருப்பத்திற்காகவே ஜப்பானில் அவரது திருமணத்தையும் நடத்தி முடித்துள்ளார்.

இந்த திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தடுத்து டூர்களையும் அவர் மேற்கொண்டு வருகிறார். அடுத்தடுத்த பேட்டிகளையும் அவர் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய சினிமா கேரியர், அரசியல் பயணம், அமெரிக்க வாழ்க்கை என அடுத்தடுத்த பல விஷயங்களை அவர் பேசி வருகிறார்.

nepoleon kamal haasan maruthanayagam movie

நடிகர் நெப்போலியன்: நடிகர் நெப்போலியன் பாரதிராஜாவின் பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். அடுத்தடுத்த போல்டான பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். ஒரு கட்டத்தில் தன்னை அரசியல் களத்திலும் இணைத்துக் கொண்டு, மத்திய அமைச்சராகவும் மாஸ் காட்டியவர். இந்த பதவி மிகப்பெரிய அளவில் அவரது விருப்பத்திற்குரியதாக இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் தன்னுடைய மகனின் வாழ்க்கைக்காக இவற்றையெல்லாம் விட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டிலானார் நெப்போலியன். தான் படிக்க வேண்டும், சுதந்திரமாக செயல்பட வேண்டும், வீல் சேரில் சுற்றி வர வேண்டும், அதற்கு அமெரிக்காதான் பெஸ்ட் என்று நெப்போலியன் மகன் தனுஷ் கூறிய நிலையில், தன்னுடைய மகனுக்காக அங்கே செட்டிலாகும் முடிவை எடுத்துள்ளார் நெப்போலியன்.

முதல் சம்பளம் 1000 ரூபாய்: அமெரிக்காவில் சாப்ட்வேர் பிசினசில் மிகச்சிறப்பாக செயல்பட்டுவரும் நெப்போலியன், அதன்மூலம் ஏராளமான தமிழ் இளைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து வருகிறார். தன்னுடைய முதல் சம்பளமாக 1000 ரூபாயை பெற்றதாக கூறியுள்ள நெப்போலியன், அடுத்த படத்தில் அந்த சம்பளம் 40 ஆயிரம், அதற்கு அடுத்தப்படத்தில் ஒரு லட்சம் என அதிகரித்தாகவும் உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது தன்னுடைய ஸ்டாஃப்களுக்கு கோடிக்கணக்கில் தான் சம்பளம் கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2000ம் ஆண்டிலேயே சென்னையில் சாப்ட்வேர் பிசினசை துவங்கியுள்ளார் நெப்போலியன்.

மகன்தான் முக்கியம்: தொடர்ந்து அமெரிக்காவில் 2004ல் இந்த பிசினசை விரிவுப்படுத்தியுள்ளார். தொடர்ந்து தனுஷிற்காக அமெரிக்காவில் செட்டில் ஆகும் சூழ்நிலை வந்தபோது குடும்பத்தினருடன் அங்கே செட்டில் ஆனதுடன், சில ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயமும் செய்து வருகிறார். பல மாடுகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில், தற்போது தன்னுடைய சாப்ட்வேர் பிசினஸ், விவசாயம் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் பொறுப்புகளை உரியவர்களிடம் விட்டுவிட்டு, தன்னுடைய மகனின் திருமணத்திற்காக ஜப்பானிற்கு வந்துள்ளார். இதுகுறித்துபேசிய அவர், தன்னுடைய மகனுடன் ஒப்பிடும்போது எதுவும் பெரிதில்லை என்று கூறியுள்ளார்.

கமலுக்கு நோ சொன்ன நெப்போலியன்: இந்நிலையில் தான் நடிக்கும்போது நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து மருதநாயகம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், கமலுக்கு வில்லனாகும் கேரக்டர் தனக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்தப்படத்தின் கதை சிறப்பாக இருந்த நிலையிலும் தான் அந்த கேரக்டரை ஏற்கவில்லை என்று நெப்போலியன் தற்போது தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் தான் அடுத்தடுத்து ஹீரோவாக நடித்துவ்நத நிலையில், மருதநாயகம் படத்தில் கமல்ஹாசனை விரட்டி விரட்டி அடிக்கும் கொடூர வில்லன் கேரக்டரில் நடிக்க தான் நோ சொன்னதாகவும் கமல்ஹாசன் அதை புரிந்துக் கொண்டதாகவும் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

நிறைவேறிய ஆசை: இதையடுத்து மருதநாயகம் படத்தில் பாசிட்டிவ்வாக சிறிய கேரக்டராக இருந்தாலும் கொடுக்கும்படி தான் கமல்ஹாசனிடம் கேட்டதாகவும் நெப்போலியன் கூறியுள்ளார். இதையடுத்து மருதநாயகம் படத்தின் துவக்கவிழாவை கமல்ஹாசன் மிகவும் பிரம்மாண்டமாக நடத்திய நிலையில், அவசரப்பட்டு பேசிவிட்டோமோ என்று தான் வருந்தியதாகவும் கூறியுள்ள நெப்போலியன், தொடர்ந்து கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் தான் தொடர்ந்து வருத்தத்திற்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து விருமாண்டி படத்தில் தன்னுடைய ஆசை நிறைவேறியதாகவும், படத்தில் தான் எதிர்பார்த்தபடியே பாசிட்டிவ்வான கேரக்டரை கமல்ஹாசன் தனக்கு கொடுத்ததாகவும் நெப்போலியன் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X