Nepoleon: முதல் முறையாக கணவருடன் வெளியில் சென்ற அக்ஷயா.. அங்க என்ன நடந்துச்சு தெரியுமா?

டோக்கியோ: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் மற்றும் நெல்லையை சேர்ந்த அக்ஷயாவிற்கு கடந்த 7ம் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் வெகு விமரிசையாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்துள்ள நிலையில், தன்னுடைய மகனின் திருமணத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருந்தார் நெப்போலியன்.

தனுஷிற்கு சிறு வயது முதலே தசை சிதைவு நோய் பாதிப்பு இருந்த நிலையில் அவருடைய சிகிச்சைக்காக அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறிய நெப்போலியன், தொடர்ந்து அங்கேயே தன்னுடைய பிசினஸ் சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்டார். அங்கு தனுஷின் பெயரிலேயே சாப்ட்வேர் பிசினஸ் துவங்கி கொடி நாட்டினார்.

nepoleon dhanoosh akshaya

நடிகர் நெப்போலியன்: நடிகர் நெப்போலியன் தமிழ் படங்களில் ஹீரோ, வில்லன் என அதிரடி கிளப்பியவர். அரசியலிலும் சிறப்பாக செயல்பட்ட இவருக்கு திருமணமாகி தனுஷ், குணால் என இரு மகன்கள் உள்ள நிலையில், முத்த மகன் தனுஷிற்கு சிறு வயதிலேயே தசை சிதைவு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவரது சிகிச்சைக்காக இங்கேயே மிகப்பெரிய அளவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த சிகிச்சைகள் சிறப்பாக பலனளிக்காத நிலையில், அவரது சிகிச்சைக்காக அமெரிக்காவில் குடும்பத்தினருடன் குடியேறினார் நெப்போலியன். தனுஷின் சிகிச்சை ஓரளவிற்கு பலனளிக்க அங்கேயே அவரது பெயரில் சாப்ட்வேர் பிசினஸ் துவங்கி அதிலும் வெற்றி பெற்றார்.

தனுஷ் & அக்ஷயா திருமணம்: இதனிடையே தன்னுடைய மகன் தனுஷிற்கு நெல்லையை சேர்ந்த அக்ஷயா என்பவருடன் திருமணம் பேசி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. தனுஷ் இல்லாமலேயே இந்த நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், வீடியோ காலில் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதையடுத்து நேற்று முன்தினம் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. தன்னுடைய மகனின் திருமணம் நடந்ததையடுத்து தந்தையாக தன்னுடைய கடமையை சாதித்த நெப்போலியன் கண் கலங்கியதை பார்க்க முடிந்தது. அவரையடுத்து திடமாக செயல்பட்டுவந்த அவரது மனைவி ஜெயசுதாவும் கண்கலங்கினார்.

தனுஷ் & அக்ஷயா இரவு உணவு: தனுஷ் -அக்ஷயா திருமணம் வெகு விமரிசையாக டோக்கியோவில் நடந்த நிலையில், இவர்களை மீனா, குஷ்பூ, ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர். இதையடுத்து மணமக்கள் நேற்றைய தினம் முதல் முறையாக இரவு உணவிற்காக வெளியில் சென்றுள்ளனர். இதன்போது தனுஷுடன் இணைந்து அக்ஷயாவும் உடன் நடந்து சென்றதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து தங்களின் உறவினர்களுடன் இணைந்து அவர்கள் இருவரும் இரவு டின்னரை சாப்பிட்டனர். இதன்போது உடன் வந்த உறவினர்கள் ஏதோ கூற அக்ஷயா வெட்கப்பட்டு சிரித்ததையும் பார்க்க முடிந்தது.

குலசாமி என பாராட்டு: நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷின் இந்த திருமணத்தை மிகச்சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். இவர்களின் இந்த திருமணம்தான் சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றது. முன்னதாக திருமணத்திற்காக பிரம்மாண்ட கப்பலில் நெப்போலியன் குடும்பத்தினர் ஜப்பான் சென்றதையும் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் இந்த திருமணம் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள போதிலும் நெநப்போலியன் மிகப்பெரிய சந்தோஷத்தில் உள்ளார். தன்னுடைய மருமகள் அக்ஷயாவை அவர் குலசாமி என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டதையும் பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X