நெப்போலியன் மகனை சாதாரணமா நினைக்காதீங்க! அந்த விஷயத்துல ஜித்து! பட்டப்படிப்பே முடிச்சு இருக்காரு!
சென்னை: தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் தமிழ் சினிமாவில் நடிகர் நெப்போலியன் இருந்தவரை ஏற்படுத்திய தாக்கம், அவரை இன்றுவரை மக்கள் மனதில் இருந்து நீக்க முடியவில்லை. சினிமா மட்டும் இல்லாமல், திமுகவில் இணைந்து மத்திய இணை அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளார். தற்போது இவர் பெயர் அதிகம் இடம் பெறும் செய்தியாக அவரது மூத்த மகன் தனுஷ் திருமணம் மாறியுள்ளது.

நடிகர் நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் தனுஷ். இவர் குழந்தைப் பருவத்தில் இருந்தே, Muscular Dystrophy என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 20 ஆண்டுகள் வரை உயிர்வாழ்வதே அரிது என மருத்துவர் கந்தராஜ் கூறுகின்றார்.

இதுமட்டும் இல்லாமல் நெப்போலியனின் மகனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா என மிகவும் மோசமாகவும் இந்த கேள்வி பெற்றோர்களான நெப்போலியன் மற்றும் அவரது மனைவியின் மனதை மிகவும் பாதிக்கும் என்பதைக் கூட புரிந்துகொள்ளாமல் பேசுகின்றார் என சிலரும், Muscular Dystrophy என்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாதா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.

அரியவகை நோய்: இப்படியான நிலையில் Muscular Dystrophy நோயினால் பாதிக்கப்பட்ட நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமண ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ்க்கு தற்போது 25 வயது ஆகின்றது. இவருக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நிறைவு பெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும், வீடியோக்கள் இணையத்தில் உலா வந்தது. மேலும் இவர்களுக்கு ஜப்பானில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

தனுஷ் என்ன படித்துள்ளார்?: தற்போது அதிகம் விவாதிக்கும் பேசுபொருளாக நெப்போலியனின் மகன் தனுஷ் மாறியிருப்பதால், இவர் தொடர்பான கேள்விகள் பலருக்கு எழுந்துள்ளது. குறிப்பாக அவர் என்ன செய்து வருகின்றார். அவர் எதாவது படித்துள்ளாரா உள்ளிட்ட பல கேள்விகளை பலரும் கேட்டு வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்த கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி: நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் ஒரு பட்டதாரி என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆமாம் அவர் ஒரு பட்டதாரி. அதுவும் ஏதோ ஒருதுறையைப் படித்தோம் என இல்லாமல், தனக்குப் பிடித்த தன்னை மிகவும் கவர்ந்த, தனது கனவு உலகை வெளிக்கொண்டு வர அனிமேஷன் பட்டம் படித்தார். தனுஷ் அமெரிக்காவில் உள்ள, Sunset Middle School Ravewood High School என்ற பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, Lipscomb University என்ற பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகால பட்டப்படிப்பினை முடித்தார். அங்கு அவர் அனிமேஷனில் இளங்கலைப் பட்டம் படித்து பட்டமும் பெற்றுள்ளார்.

அனிமேஷனில் ஜித்து: தான் விரும்பிப் படித்த அனிமேஷன் படிப்பின் மூலம் பல அனிமேஷன் கதாபாத்திரங்களை வரைந்து அசத்தியுள்ளார் தனுஷ். தனது மகன் ஒரு பட்டப்படிப்பினை படித்தது மட்டும் இல்லாமல், அதில் கைதேர்ந்தவராக இருப்பது என்பது நெப்போலியன் மற்றும் அவரது மனைவி ஜெயசுதாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











