Nepoleon: சிவகார்த்திகேயனை பார்த்து பொறாமை படாதீங்க.. நடிகர் நெப்போலியன் ஓபன்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் வரும் தீபாவளி ரிலீசாக அக்டோபர் 31ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார் சாய் பல்லவி.
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள அமரன் படம் இந்த தீபாவளி ரேஸில் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் தீபாவளி ரிலீசாக வரும் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அமரன் படம்: கடந்த சில வாரங்களாகவே அமரன் படத்தின் பிரமோஷன்களையொட்டி, கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில், டிரெயிலர் மிரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் சென்சார் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.
நெப்போலியன் சப்போர்ட்: படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீசாகவுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் நெப்போலியன் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பாராட்டியுள்ளார். வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் மத்திய பகுதி திருச்சியிலிருந்து வந்த சிவகார்த்திகேயன், நடிச்சி இவ்வளவு சீக்கிரம் மேலே வந்துள்ளதை பாராட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு மற்றவர்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பொறாமை படாதீங்க: சினிமாவில் ஆரோக்கியமான போட்டியை வைத்துக் கொள்ளவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இன்றைக்கு சிவகார்த்திகேயன் நடித்த படம் டாப் 5 நடிகர்கள் படத்துக்கு சமமாக உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள நெப்போலியன், மற்றவர்கள் அதைவிட சிறந்த படத்தை கொடுக்க முயற்சி செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அதை விட்டுவிட்டு சிவகார்த்திகேயன் மீது பொறாமை படுவது, இழிவாக பேசுவது சரியில்லை என்றும் நெப்போலியன் தெரிவித்துள்ளார். தன்னுடைய மகன் தனுஷின் திருமணத்தில் பிசியாக உள்ள போதிலும் சிவகார்த்திகேயனுக்காக நெப்போலியன் குரல் கொடுத்துள்ளது அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











