Nepoleon: ஜப்பானில் உப்புமா & இட்லி.. விருந்தினர்கள் உபசரிப்பில் மாஸ் காட்டும் நெப்போலியன்!

ஜப்பான்: நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. நெப்போலயன் மகன் தனுஷ் மற்றும் அக்ஷயாவிற்கு நாளைய தினம் ஜப்பானில் திருமணம் நடக்க உள்ளது. முன்னதாக இந்த திருமணத்திற்காக சங்கீத், ஹல்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நெப்போலியன் ஏற்பாடு செய்துள்ளார்.

அடுத்தடுத்த திருமண ஏற்பாடுகளால் ஜப்பானே களைகட்டி வருவதாக திருமணத்திற்காக ஜப்பான் சென்றுள்ள விருந்தினர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர். இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகை ராதிகா, சரத்குமார், மீனா, கலா மாஸ்டர் உள்ளிட்ட பலரும் ஜப்பான் சென்றுள்ளனர். இந்த திருமணத்திற்காக ஜப்பானையே நம்ம தமிழ்நாட்டை போல மாற்றியுள்ளார் நெப்போலியன். தென்னிந்திய உணவுகள் அனைத்தும் அங்கு மிகச் சிறப்பாக விருந்தினர்களுக்கு கிடைத்து வருகிறது.

nepoleon dhanush japan

நடிகர் நெப்போலியன் மகன் திருமணம்: நடிகர் நெப்போலியன் நீண்ட காலங்களாக ஹீரோவாகவும் கேரக்டர் ரோல்களிலும், வில்லனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அரசியலிலும் இவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் தனுஷிற்கு தசை சிதைவு நோய் உள்ள காரணத்தால் அவரது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அங்கேயே சாப்ட்வேர் பிசினஸ் செய்யும் நெப்போலியன் மிகச்சிறந்த பிசினஸ்மேனாக மாறியுள்ளார். தனுஷிற்கு அங்கு சிகிச்சை ஓரளவுக்கு கை கொடுத்த நிலையில் அவரது உடல் நிலையில் சிறப்பான மாற்றம் காணப்பட்டது.

ஜப்பானில் கல்யாணம்: இந்நிலையில் தன்னுடைய மகன் தனுஷிற்கு அக்ஷயா என்ற பெண்ணை மணமுடிக்க திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார் நெப்போலியன். மணப்பெண் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான். இவர்களது திருமணத்தை ஜப்பானில் நடத்த திட்டமிட்டு மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். நாளைய தினம் இவர்களது திருமணம் ஜப்பானில் மிகச் சிறப்பாக நடத்தப்பட உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் இருந்து திரைப்பிரபலங்கள் பலரும் திருமணத்தில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ளனர். மீனா, ராதிகா, சரத்குமார், கலா மாஸ்டர் உள்ளிட்ட பலரும் இந்த திருமண கொண்டாட்டத்திற்காக சென்றுள்ளதை பார்க்க முடிகிறது.

சங்கீத்தை நடத்தும் கலா மாஸ்டர்: திருமணத்திற்கு முன்னதாக சங்கீத், ஹல்தி உள்ளிட்ட பல கொண்டாட்டங்களையும் நெப்போலியன் ஏற்பாடு செய்துள்ளார். முன்னதாக மணமக்களின் ப்ரீ வெட்டிங் போட்டோஷுட்டும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. அடுத்ததாக திருமணத்தை ஒட்டி நடக்க உள்ள சங்கீத்தை கலா மாஸ்டர் நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் சரத்குமார், ராதிகா மீனா உள்ளிட்டவர்களும் நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திருமணத்திற்காக வந்துள்ள விருந்தினர்களை மிகச் சிறப்பாக விமான நிலையத்திற்கு சென்று நெப்போலியன் வரவேற்றதையும் பார்க்க முடிந்தது.

விருந்து உபசாரத்தில் மாஸ் காட்டும் நெப்போலியன்: வந்தவர்களுக்கு விருந்து உபசாரங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தென்னிந்திய உணவுகள் அனைத்தும் விருந்தினர்களுக்கு கிடைக்கும் வகையில் ஜப்பானில் சமையல் கலைஞர்களை வைத்து நெப்போலியன் ஏற்பாடு செய்துள்ளார். முதல் நாளிலேயே நம்ம ஊர் உப்புமா, இட்லி உள்ளிட்டவை கிடைத்ததாக கலா மாஸ்டர் தன்னுடைய வீடியோ ஒன்றில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஒவ்வொரு வேளையும் விருந்து களைகட்டி வருகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X