Nepoleon: பந்தகால் நட்டாச்சு.. ஜரூராக மகன் தனுஷ் திருமணத்திற்கு தயாரான நெப்போலியன்!

ஜப்பான்: நடிகர் நெப்போலியன் மிகச்சிறந்த தந்தையாக தன்னுடைய மகனின் தனுஷ் திருமணத்திற்கு தயாராகியுள்ளார். தன்னுடைய மகனின் விருப்பத்திற்கிணங்க தான் வசித்துவரும் அமெரிக்காவை விட்டுவிட்டு ஜப்பானில் அவரது திருமணத்தை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார். பிரபலங்கள் பலரும் பங்கேற்க திருமணம் மிகவும் தடபுடலாக நடக்கவுள்ளது.

முன்னதாக பிரம்மாண்ட கப்பல் மூலம் ஜப்பானுக்கு தன்னுடைய மகன் தனுஷ் உள்ளிட்ட குடுமபத்தினருடன் பயணம் செய்திருந்தார் நெப்போலியன். இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது. தன்னுடைய மகனின் குறையுடன் அவரை ஏற்றுக் கொண்ட சிறப்பான தந்தையாகவே நெப்போலியன் பாராட்டுக்கு உள்ளாகி வருகிறார்.

nepoleon akshaya

நடிகர் நெப்போலியன்: நடிகர் நெப்போலியன் நல்ல ஹீரோவாகவும் அரசியல்வாதியாகவும் தன்னை தன்னை வெளிப்படுத்தியவர். வில்லனாகவும் அதிரடி காட்டியவர். ஒரு கட்டத்தில் தன்னுடைய மகனுக்காக இவை அனைத்தையும் விட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டிலானார். நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என இரு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருந்ததை கண்டறிந்து அதற்காக அவரது சிகிச்சைக்காக அமெரிக்காவில் குடும்பத்துடன் நெப்போலியன் செட்டிலானார். அங்கு அவரது சிகிச்சை ஓரளவிற்கு பலனளித்த நிலையில், தன்னுடைய பிசினசையும் அங்கேயே செய்து வருகிறார்.

ஜப்பானில் பிரம்மாண்ட திருமணம்: தற்போது தன்னுடைய மகனின் திருமணத்தை மிகவும் சிறப்பாக பிரம்மாண்டமாக ஜப்பானில் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார். நாளைய தினம் தனுஷ் -அக்ஷயா திருமணம் ஜப்பானின் மிகவும் பிரம்மாண்டமாக நடக்கவுள்ள நிலையில் அதையொட்டி தமிழகத்தில் இருந்து மீனா, சரத்குமார், ராதிகா, கலா மாஸ்டர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஜப்பான் சென்றுள்ளனர். நாளை திருமணம் நடக்கவுள்ள நிலையில் முன்னதாக சங்கீத், ஹல்தி கொண்டாட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. தனுஷ் மற்றும் அக்ஷயாவிற்கு ப்ரீ வெட்டிங் போட்டோஷுட்டும் மிகவும் சிறப்பாக நடந்துள்ளது. இதில் மணமக்கள் தங்களது வெட்கத்தை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது.

nepoleon akshaya

பந்தகால் நடும் நிகழ்ச்சி: இந்நிலையில் திருமணத்தையொட்டி திருமண பந்தகால் நடும் விழாவும் எளிமையான வகையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் நெப்போலியன் உள்ளிட்ட குடும்பத்தினர் சிறப்பாக பங்கேற்றனர். இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. பந்தகாலிற்கு வழிபாடு செய்து குடும்பத்தினர் முன்னிலையில் அதை நெப்போலியன் நடுவதாக தற்போது வீடியோவில் காணப்படுகிறது. இந்த நிகழ்வில் தனுஷும் தனக்கேயுரிய மெலிதான சிரிப்புடன் காணப்படுகிறார். அனைவர் முகங்களிலும் சந்தோஷம் தவழ்கிறது.

சங்கீத் நிகழ்ச்சி: இன்று மாலை சங்கீத் நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை கலா மாஸ்டர் நடத்தவுள்ளார். அவரிடம் முழு பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மீனா, ராதிகா உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்று ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த திருமணம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து இந்த திருமண நிகழ்வுகள் அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது. வீடியோக்களும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X