Akshaya & Jayasudha: மாமியாருடன் கைக்கோர்த்து நடந்த அக்ஷயா.. கிண்டலடித்த மைத்துனர்!

டோக்கியோ: நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது சிகிச்சை மற்றும் படிப்பிற்காக அமெரிக்காவில் அவர் குடும்பத்துடன் செட்டிலானார். 10 வயதில் இருந்தே நெப்போலியனின் மகன் தனுஷ் இவ்வாறு உடல்நல பாதிப்பால் சிரமப்பட்ட போதிலும் தன்னுடைய கேரியரையும் சிறப்பாக்கியுள்ளார். அவர் அனிமேஷன் துறையில் டிகிரி முடித்துள்ள நிலையில் அவருக்கு வரைவதில் மிகுந்த ஆர்வம் என்று கூறியதை பார்க்க முடிந்தது.

தனுஷை திருமணம் செய்து கொண்டுள்ள அக்ஷயாவிற்கும் ஆர்ட் வேலைகளில் மிகுந்த ஆர்வம் உள்ள நிலையில் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது புகைப்படங்களை வரைந்து பகிர்ந்து கொண்டதையும் பகிர்ந்து கொண்டனர். இவர்களது திருமணம் வெகு விமர்சையாக ஜப்பானில் நடந்து முடிந்துள்ள நிலையில் இவர்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தினந்தோறும் ஷாப்பிங் உள்ளிட்ட வீடியோக்களை அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

nepoleon jayasudha akshaya

நடிகர் நெப்போலியன்: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜப்பானில் நெல்லையை சேர்ந்த அக்ஷயா என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அக்ஷயாவின் குடும்பத்தினர் ஒன்று திரண்டு இந்த திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அக்ஷயாவை ஜப்பானில் நெப்போலியன் குடும்பத்தினருடன் விட்டுவிட்டு கண்ணீர் மல்க கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது பெற்றோர் மற்றும் அக்கா குடும்பத்தினர் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தனுஷ், அக்ஷயா மற்றும் நெப்போலியன் குடும்பத்தினர் இணைந்து அடுத்தடுத்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஜப்பானில் கல்யாணம்: ஜப்பானின் டோக்கியோவில் திருமணத்தை நிறைவு செய்துள்ள நெப்போலியன் மற்றும் குடும்பத்தினர் அங்கே ஆறு மாத காலங்கள் இருப்பார்கள் என்றும் இதையடுத்து அவர்கள் அமெரிக்கா திரும்பி அங்கு மீண்டும் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணத்தை நடத்த உள்ளதாகவும் நெப்போலியன் முன்னதாக கூறியுள்ளார். அமெரிக்காவின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு இந்த திருமணத்தை நடத்த உள்ளதாகவும் நெப்போலியன் தெளிவுபடுத்தியிருந்தார். திருமணத்திற்கு முன்னதாக அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு பிரம்மாண்ட சொகுசு கப்பலில் நெப்போலியன் மற்றும் குடும்பத்தினர் சென்ற வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.

அடுத்தடுத்த வீடியோக்கள்: தமிழின் முன்னணி நடிகர், நடிகைகள் சூழ தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் அவர்கள் ஜப்பானில் அடுத்தடுத்து அவுட்டிங் போவதை, டின்னர் சாப்பிடுவதை, ஷாப்பிங் செய்வதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தன்னுடைய மாமியார் ஜெயசுதாவுடன் கைகோர்த்து அக்ஷயா நடை போட்டபடி டோக்கியோ வீதிகளில் சென்றதையும் உடன் தனுஷ் தன்னுடைய வீல்சேரில் வந்ததையும் பார்க்க முடிந்தது. இதையடுத்து ஜெயசுதா மற்றும் அக்ஷயா இருவரும் இணைந்து ஷாப்பிங் செய்தனர். தொடர்ந்து டின்னரை சாப்பிட்டதையும் பார்க்க முடிந்தது.

கிண்டலடித்த குணால்: அப்போது தனுஷின் தம்பி குணால் கிண்டல் அடித்தபடி வீடியோவிற்காக முகத்தை பல்வேறு போஸ்களில் கோணியபடி காணப்பட்டதையும் பார்க்க முடிந்தது. அக்ஷயாவை தங்களது மருமகள் ஆக்கிக் கொள்ள கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்களது குடும்பத்தினரிடம் கேட்டு வந்ததாகவும் இதையடுத்து அக்ஷயா மனம் விரும்பி இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் நெப்போலியன் குடும்பத்தினர் முன்னதாக பகிர்ந்திருந்தனர். மேலும் தன்னுடைய மகனை அவனுடைய குறையுடன் ஏற்றுக்கொண்ட அக்ஷயா தங்களின் மருமகள் அல்ல மறு.. மகள் என எனவும் தங்களது குலசாமி எனவும் திருமணத்தின்போது நெப்போலியன் சபையில் கூறினார்.

கைகோர்த்த மாமியார் -மருமகள்: இவை அனைத்தையும் தன்னுடைய அக்மார்க் சிரிப்பின் மூலம் அக்ஷயா ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் அக்ஷயா குறித்த பல விஷயங்களை யூடியூப் சேனல் ஒன்றிற்குபகிர்ந்தனர். இந்நிலையில் தற்போது திருமணம் முடிந்த பின்பு மாமியார் மற்றும் மருமகள் கைகோர்த்து நடப்பதை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X