Nepoleon: என்னுடைய மருமகள் வந்த நேரம்.. முதலில் அவர் பயந்தார்.. நெப்போலியன் மனைவி ஜெயசுதா ஓபன்!
நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணம் குறித்து தான் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் தற்போது அதிகமாக பேசி வருகின்றனர். நாளைய தினம் தனுஷின் திருமணம் ஜப்பானில் நடைபெற உள்ள நிலையில் தன்னுடைய மகனின் விருப்பத்திற்காகவே இந்த திருமணத்தை நெப்போலியன் ஜப்பானில் ஏற்பாடு செய்துள்ளதாக அவரது மனைவி ஜெயசுதா தெரிவித்துள்ளார்.
தன்னுடைய திருமணம் ஜப்பானில் நடக்க வேண்டும் என்று தனுஷ் ஆசைப்பட்டதாக ஜெயசுதா கூறியுள்ளார். இதனிடையே தனுஷின் அனைத்து உடல்நல பிரச்சினைகளையும் தெரிந்தே அக்ஷயா இந்த திருமணத்திற்கு ஓகே சொன்னதாகவும் அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னதாகவே செல்போன் மூலம் ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நெப்போலியன் மகன் திருமணம்: நடிகர் நெப்போலியன் மற்றும் அவரது மனைவி ஜெயசுதா இருவரும் தங்களின் மூத்த மகன் தனுஷின் திருமணத்திற்காக மிகவும் ஜரூராக தயாராகி வருகின்றனர். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் மிகவும் தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறார் நெப்போலியன் மகன் தனுஷ். முன்னதாக அவரது இந்த திருமணம் காசுக்காக நடைபெறுவதாகவும் இதுபோன்ற உடல்நல பாதிப்பை வைத்துக் கொண்டு தனுஷ் என்ன செய்வார் என்றும் பல்வேறு கமெண்ட்கள் இருந்த நிலையில் தனுஷ் இவற்றையெல்லாம் கடக்கும் வகையில் தன்னுடைய திருமண வாழ்க்கையில் தான் ஜெயித்து காட்டுவதாக கூறியிருந்தார்.
நெப்போலியன் மனைவி: அவரது இந்த கமெண்ட் தொடர்ந்து இந்த திருமணம் குறித்து அடுத்தடுத்த சர்ச்சை கருத்துக்களை பேசி வந்த பலரது வாயையும் அடைக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் தனுஷ் மற்றும் தன்னுடைய மருமகள் அக்ஷயா குறித்து நெப்போலியன் மனைவி ஜெயசுதா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். தன்னுடைய மகனின் உடல்நல குறைகள் அனைத்தையும் தன்னுடைய மருமகளிடம் முன்னதாகவே கூறிவிட்டதாகவும் அவருக்கு பிடித்தே இந்த திருமணம் நடப்பதாகவும் ஜெயசுதா கூறியுள்ளார். திருமணத்திற்கு முன்னதாக தனுஷும் அக்ஷயாவும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டதாகவும் அவர்கள் தொடர்ந்து செல்போனில் சாட்டிங் மூலமாக உரையாடியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மருமகள் வந்த நேரம்: இருவரும் செல்போனில் பேசுவதை காட்டிலும் இவ்வாறு சேட்டிங் செய்வதிலேயே மிகுந்த ஆர்வம் காண்பித்ததாகவும் ஜெயசுதா மேலும் தெரிவித்துள்ளார். அக்ஷயா வருகையால் தன்னுடைய மகன் வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோஷம் வந்துள்ளதாகவும் ஜெயசுதா கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவை விட்டுவிட்டு இந்த திருமணத்தை தாங்கள் ஜப்பானில் நடத்துவதற்கான காரணத்தையும் ஜெயசுதா பகிர்ந்துள்ளார். தனுஷ் சில ஆண்டுகளாகவே ஜப்பானிற்கு செல்ல வேண்டும் என்று கூறி வந்ததாகவும் அதனால் அவரது விருப்பத்திற்கு ஏற்ப ஜப்பானில் இந்த திருமணத்தை திட்டமிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பயந்த அக்ஷயா: மேலும் ஜப்பானில் திருமணம் என்றவுடன் அங்கு உணவு உள்ளிட்டவை பிரச்சினையாக இருக்குமே என்று அக்ஷயா பயப்பட்டதாகவும் ஆனால் அதற்கு ஏற்ப தங்கள் திருமண ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்துள்ளதாகவும் ஜெயசுதா மேலும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அக்ஷயா மற்றும் அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்த திருமணம் தனுஷின் வாழ்க்கையில் சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுத்துள்ளதாகவும் இதை பார்த்து ஒரு அம்மாவாக தானும் நிம்மதியடைந்துள்ளதாகவும் ஜெயசுதா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











