’ஜெயம்’ பட ஹீரோவுக்கு நிச்சயதார்த்தம்.. நீண்ட நாள் காதலி ஷாலினியை வெகு விரைவாக மணக்கிறார்!
ஹைதராபாத்: 'ஜெயம்' பட ஹீரோ என்றவுடனே ஷாக் ஆகி விடாதீங்க, அது நம்ம ஜெயம் ரவி அல்ல, 'ஜெயம்' படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான தெலுங்கு ஜெயம் படத்தின் ஹீரோ நித்தினுக்குத் தான் நிச்சயதார்த்தம்.
ஜெயம், தில், ஹீரோ, ராம், அ..ஆ, தைரியம் என்ன எல்லாம் தமிழ் பட டைட்டிலாவே இருக்குன்னு பார்த்தா, இத்தனை டைட்டில்களிலும் வெளியான தெலுங்கு படங்களின் நாயகன் தான் நித்தின்.
தனது நீண்ட நாள் காதலியான ஷாலினியை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், தற்போது அவரை நிச்சயம் செய்துள்ளார்.

ஜெயம் ஹீரோ
இயக்குநர் தேஜா இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ஜெயம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நித்தின். இந்த படத்தில் சதா ஹீரோயினாகவும், கோபிசந்த் வில்லனாகவும் நடித்து இருந்தனர். தமிழில் ஜெயம் ரவியை மட்டும் மாற்றி இங்கே மோகன் ராஜா இயக்கிய படமும் சூப்பர் ஹிட் படம் ஆனது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஹிட்
தெலுங்கில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள நடிகர் நித்தின், சமந்தா, திரிஷா, ராஷ்மிகா மந்தனா என பல முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு வெளியான அ.. ஆ படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்து இருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. 2018ம் ஆண்டு வெளியான ஸ்ரீனிவாசா கல்யாணம், 2020ல் வெளியாக காத்திருக்கும் பீஷ்மா படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

தள்ளிப்போன திருமணம்
தெலுங்கின் டாப் நடிகராக வலம் வரும் நித்தினின் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக போடப்பட்ட கொரோனா லாக்டவுன் காரணமாக அவரது திருமணம் தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போனது. இந்நிலையில், தற்போது அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தோழியுடன் நிச்சயம்
டோலிவுட் நடிகர் நித்தின் தனது நீண்ட நாள் தோழியும் காதலியுமான ஷாலினியை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. மோதிரத்தை மாற்றும் போது, இருவரும் புன்னகையை அடக்க முடியாமல் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

திருமணம் எப்போது
ரொம்ப நாளெல்லாம் இல்லீங்க, வரும் ஜூலை 26ம் தேதி நடிகர் நித்தினுக்கும், ஷாலினுக்கும் திருமணம் நடைபெற போகிறது. நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து அந்த அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி இருக்கிறது. லாக்டவுன் தளர்வுகள் விடப்பட்டு இருந்தாலும், குடும்பத்தினர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











