மேலும் ஒரு அதிர்ச்சி.. அசுரன், காலா பட நடிகர் நிதிஷ் கொரோனாவால் மரணம்.. சோகத்தில் திரையுலகம்!

சென்னை: கொரோனா தொற்றால் நடிகர் நிதிஷ் வீரா மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

Asuran Pudhupettai நடிகர் Nitish Veera கொரோனாவால் உயிரிழப்பு | #RIPNitishVeera

கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றுக்கு பாரபட்சமின்றி ஆளாகி வருகின்றனர்.

கொரோனாவால் மரணம்

கொரோனாவால் மரணம்

அதிலும் தமிழ் சினிமா பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதும், உயிரிழப்புவதும் தொடர்ந்து வருகிறது. இயக்குநர்கள் தாமிரா, கேவி ஆனந்த், தயாள, நடிகர்கள் பாண்டு, மாறன், ஜோக்கர் துளசி என பலரும் மரணமடைந்துள்ளனர்.

தொடரும் மரணங்கள்

தொடரும் மரணங்கள்

இதேபோல் பாடகர் கோமகன், தயாரிப்பாளர்கள் பாபு ராஜா, முத்துக்குமரன், சேலம் சந்திரசேகர் என பலரும் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா மட்டுமின்றி மாரடைப்பு மற்றும் திடீர் உடல் நலக்குறைவு காரணமாகவும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மரணித்து வருகின்றனர்.

நடிகர் நிதிஷ் வீரா மரணம்

நடிகர் நிதிஷ் வீரா மரணம்

எஸ்பி ஜனநாதன், விவேக், நெல்லை சிவா, குட்டி ரமேஷ் பலரின் மரணமும் தமிழ் சினிமாவை உலுக்கியுள்ளது. இந்நிலையில் 48 வயதே ஆன நடிகர் நிதிஷ் வீராவின் மரணம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காலா, அசுரன் படங்கள்

காலா, அசுரன் படங்கள்

2000ஆம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் வள்ளரசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நிதிஷ் வீரா. புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, ராட்சசி, காலா, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கொரோனாவால் பாதிப்பு

கொரோனாவால் பாதிப்பு

காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்திருந்தார் நிதிஷ் வீரா. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிதிஷ் வீரா சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நிதிஷ்.

தமிழ் சினிமா அதிர்ச்சி

தமிழ் சினிமா அதிர்ச்சி

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நிதிஷ் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X