twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாதி படத்தை முடித்த நிலையில் திடீர் மரணமடைந்த நடிகர்.. மீண்டும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு!

    |

    சென்னை: நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவுக்கு பலியான நிலையில் அவர் நடித்த படத்தை மீண்டும் படப்பிடிப்பு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2000ஆம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் வல்லரசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நிதிஷ் வீரா. புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, ராட்சசி, காலா, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    கொரோனாவால் பாதிப்பு

    கொரோனாவால் பாதிப்பு

    காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்திருந்தார் நிதிஷ் வீரா. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிதிஷ் வீரா சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    தமிழ் சினிமா அதிர்ச்சி

    தமிழ் சினிமா அதிர்ச்சி

    ஆனால் கடந்த 17 ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி நிதிஷ் வீரா உயிரிழந்தார். கூத்துப்பட்டறையில் நடிகராக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கிய நிதிஷ் வீரா, பிரபல பத்திரிக்கையாளர் ஞானி நாடகக்குழுவில் முக்கிய நடிகராக வலம் வந்து பின்னர் திரைத்துறையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

    கொரோனாவால் மரணம்

    கொரோனாவால் மரணம்

    வெற்றிமாறனின் அசுரன் படத்தில் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார் நிதிஷ் வீரா. 48 வயதான நிதிஷ் வீராவின் மரணம் பலரையும் அதிர்ச்சியுல் ஆழ்த்தியது. நிதிஷ் வீரா 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார்.

    சாணிக்காயிதம் படம்

    சாணிக்காயிதம் படம்


    அந்த வகையில் செல்வராகவனின் சாணிக்காயிதம் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். படத்தின் பாதிக் காட்சிகளில் நடித்து முடித்திருந்த நிலையில் நிதிஷ் வீரா திடீரென மரணமடைந்தார்.

    மீண்டும் படப்பிடிப்பு

    மீண்டும் படப்பிடிப்பு

    இதனால் அவர் நடித்த காட்சிகளை வேறு நடிகரை வைத்து மீண்டும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதிஷ் வீரா லாபம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதேபோல் நீரோ என்ற படத்திலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

      English summary
      Actor Nithish Veera portions to be re shoot in Sanikkayitham movie. Nithish veera passed away on 17th of May due to Corona.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X