வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய நிதிஷ் வீரா.. வைரலாகும் கடைசி வீடியோ!

சென்னை: மறைந்த நடிகர் நிதிஷ் வீரா கடைசியாக பேசிய நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் எடுத்துள்ள நிலையில் தமிழ் சினிமா நடிகர்களின் அடுத்தடுத்த மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாறன், நெல்லை சிவா, பாண்டு, ஜோக்கர் துளசி உள்ளிட்டோர் மரணமடைந்தனர். இந்நிலையில் நிதிஷ் வீராவின் மரணமும் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடக்குழு மூலம்

நாடக்குழு மூலம்

கூத்துப்பட்டறையில் நடிகராக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கிய நிதிஷ் வீரா, பிரபல பத்திரிக்கையாளர் ஞானி நாடகக்குழுவில் முக்கிய நடிகராக வலம் வந்து பின்னர் திரைத்துறையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

கொரோனாவால் மரணம்

கொரோனாவால் மரணம்

காலா படத்தில் ரஜினிகாந்துக்கு மகனாக நடித்திருப்பார் நிதிஷ் வீரா. வெற்றிமாறனின் அசுரன் படத்தில் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார் நிதிஷ் வீரா. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிதிஷ் வீரா இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கடைசி வீடியோ

அவர் கடைசியாக பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அசுரன் படத்தின் தனக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் வெற்றி மாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தனுஷுக்கு பாராட்டு

தனுஷுக்கு பாராட்டு

இதேபோல் நடிகர் தனுஷுக்கும் நிதிஷ் வீரா நன்றி கூறியுள்ளார். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைந்து நடித்துள்ள படம் இது என்று கூறியுள்ள நிதிஷ் வீரா அவரை பாராட்டி பேசியுள்ளார்.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

மேலும் அசுரன் படத்தில் நடிக்க தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நிதிஷ் வீரா. நிதிஷ் வீராவின் இந்த கடைசி வீடியோவை தனுஷின் ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X