SK25: புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் நிவின் பாலி?.. துல்கர் சல்மான் கேரக்டர்?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சிறப்பான கதை தேர்வுகளால் கவனம் ஈர்த்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது மாவீரன், அயலான் படங்கள் வெளியான நிலையில், தற்போது அவரது நடிப்பில் அமரன் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள நிலையில் கமல்ஹாசன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் சிவகார்த்திகேயன். அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே44 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்தவுடன் அடுத்தடுத்து சிபி சக்ரவர்த்தி, நெல்சன் திலீப்குமார் இயக்கங்களில் இணையவுள்ளதாக தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

sivakarthikeyan sk25 movie nivin pauly

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் கடந்த மாதம் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்து வருகிறது. கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இந்தப் படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்ட படமாக உருவாகியுள்ளது. இந்தப் படம் வெளியாகி தற்போது இரண்டாவது வாரயிறுதியில் வெற்றிநடை போட்டு வருகிறது. படத்தின் வசூல் 200 கோடிகளை தாண்டியுள்ள நிலையில், படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக அதிகமான பிரமோஷன்களில் ஈடுபட்ட நிலையில், தற்போது வெற்றி கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்த படங்கள்: அமரன் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் மிகச்சிறப்பாக பங்கேற்றனர். இதில் சிவகார்த்திகேயனும் பங்கேற்ற நிலையில், அவர் தன்னுடைய முந்தைய படங்கள், குடும்ப வாழ்க்கை அடுத்தடுத்த படங்கள், அதன் இயக்குநர்கள் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். அமரன் படத்தின் பல நெகிழ்ச்சியான தருணங்களையும் அவர் கூறினார். தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 44 படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து டான் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, டாக்டர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஆகியோருடனும் இணையவுள்ளதாக கூறியுள்ளார்.

எஸ்கே25 படத்தில் நிவின் பாலி?: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா கூட்டணியில் புறநானூறு படத்திலும் சிவகார்த்திகேயன் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் சூர்யா, துல்கர் சல்மான் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயனும் துல்கர் சல்மானுக்கு பதிலாக நிவின் பாலியும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எஸ்கே 25 படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ள நிலையில் படத்தின் தலைப்பு மாற்றப்படுமா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.

சுதா கொங்கரா -சிவகார்த்திகேயன் கூட்டணி: முன்னதாக சூர்யா -சுதா கொங்கரா கூட்டணியில் வெளியானது சூரரை போற்று. பயோபிக்காக வெளியான இந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பும் சுதா கொங்கராவின் ஸ்கிரிப்ட் போன்றவை படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை மட்டுமில்லாமல் தேசிய விருதுகளையும் அள்ளிக் கொடுத்தது. இதையடுத்து இந்தக் கூட்டணி மீண்டும் புறநானூறு படத்தில் இணையவுள்ளதாகவும் சூர்யாவே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்தப் படம் கைவிடப்பட்டு, சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் சுதா கொங்கராவுடன் இணைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X