பாண்டியன் சுகவீனம் - மதுரையில் சிகிச்சை
நடிகர் பாண்டியன், மஞ்சள் காமாலை காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் தற்போது நல்ல முன்னேற்றத்தில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் வளையல் கடை வைத்திருந்த பாண்டியன், பாரதிராஜாவின் கண்ணில் பட்டு, மண்வாசனை படம் மூலம் நடிகரானார். அதன் பின்னர் நிறையப் படங்களில் நடித்தார்.
ஹீரோவாக நீண்ட காலம் தாக்குப் பிடிக்காத பாண்டியன், அதன் பின்னர் சிறு சிறு வேடங்களில் நடித்தார். இடையில் திமுகவில் சில காலம் இருந்தார். பின்னர் அதிமுகவுக்குப் போனார். தீவிர மேடைப் பேச்சாளராக செயல்பட்டு வந்தார்.
சமீப காலமாக எங்கும் காணப்படாமல் வீட்டோடு இருந்தார். இந்த நிலையில், இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பாண்டியனுக்கு மஞ்சள் காமாலை வந்து சரியானது.
குடிப்பழக்கம் கொண்டவரான பாண்டியன் அடிக்கடி குடித்ததால், அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. மேலும், மஞ்சள் காமாலையும் தாக்கியது.
இதையடுத்து சொந்த ஊரான மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பாண்டியன். அங்கு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாண்டியன் உடல் நிலை தேறி வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications