ஒத்த செருப்பு படத்தை விளம்பரப்படுத்த ரசிகர் கூறிய பலே யோசனை.. பாராட்டிய நடிகர் பார்த்திபன்!
Recommended Video
சென்னை: ஒத்த செருப்பு படத்தை விளம்பரப்படுத்த ரசிகர் ஒருவர் கூறிய யோசனையை நடிகர் பார்த்திபன் பாராட்டியுள்ளார்.
நடிகர் பார்த்திபன் புதிய பாதை, உள்ளே வெளியே உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர், நடிகர், எழுத்தாளர், கதையாசிரியர், தயாரிப்பாளர் என பல்வேறு முகங்களை கொண்டவர் பார்த்திபன்.
இவர் கடைசியாக இயக்கிய படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. இந்த படத்தில் சாந்தனு, பார்வதி நாயர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஒத்த செருப்பு
இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ஒத்த செருப்பு. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ரசூல் பூக்குட்டியும் பணியாற்றியுள்ளார்.

ரிலீஸ்க்கான வேலை
இந்தப் படம் வரும் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனை முன்னிட்டு ரிலீஸ்க்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் பார்த்திபன்.

வரவேற்பு
படத்தை பார்த்த பிரபலங்களும் படம் குறித்த நல்ல கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். இதனால் மக்களிடையேயும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர் யோசனை
இந்நிலையில் ரசிகர் ஒருவர் படத்தை விளம்பரப்படுத்துவது தொடர்பாக நடிகர் பார்த்திபனின் டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவுவிட்டுள்ளார். அதாவது, சார் என் மனதில் பட்ட சின்ன யோசனை அனைவரிடமும் மொபைல் உள்ளது 20 ம் தேதி படம் ரிலீஸ் அதனை விளம்பரபடுத்த அனைவரும் வரும் 19ம் தேதி வாட்சப் ஸ்டேடஸாக வைத்தால் நிச்சயம் அனைவருக்கும் படத்தை பற்றி தெரிய ஒரு வாய்ப்பாக இருக்கும் இதை தமிழக மக்களுக்கு நீங்க ஒரு வேண்டுகோளாக வையுங்கள் சார் என தெரிவித்துள்ளார்.
செய்கிறேன்
ரசிகரின் இந்த பதிவை பார்த்த நடிகர் பார்த்திபன், நன்றி நல்ல யோசனை.. செய்கிறேன்! என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











