இன்றைய சந்திப்பு.. நாளைய செய்தியாகலாம்.. ஒத்த போட்டோவை போட்டு ரசிகர்களை உசுப்பிவிட்ட பழைய கூட்டணி!

Recommended Video

OthaSeruppu | பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும் போது சின்ன படங்களை ஒதுக்காதிங்க-வீடியோ

சென்னை: தமிழ் சினிமாவின் பழைய நகைச்சுவை கூட்டணி என வர்ணிக்கப்படும் இரண்டு பிரபலங்கள் சந்திக்கொண்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எத்தனை நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் வடிவேலு மாதிரி வராதுப்பா என்று சொல்பவர்கள் பலர். மக்களை சிரிக்க வைக்க மற்றவர்களை கிண்டல் கேலி செய்யாமல் தானே கிண்டல் கேலிக்கு ஆளாகி அடி வாங்கி சிரிக்க வைக்கும் அற்புதமான கலைஞன்.

2011 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவுக்கு ஆதரவாக விஜயகாந்தை விமர்சித்து பிரச்சாரம் செய்தார் வடிவேல். அவ்வளவுதான், அப்போது முதலே அவருக்கு இறங்கு முகம்தான்.

உங்கள் நான் நிகழ்ச்சியே சாட்சி

உங்கள் நான் நிகழ்ச்சியே சாட்சி

அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக படங்கள் எதுவும் கிடைக்கவில்லை வடிவேலுக்கு. ஆனாலும் மனுஷர் இன்னும் ஃபுல் ஃபார்மில்தான் உள்ளார் என்பதற்கு அண்மையில் நடைபெற்ற கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியே சாட்சி.

தலைவன் இருக்கின்றான்

தலைவன் இருக்கின்றான்

அந்த நிகழ்ச்சியிலேயே அதிகமாக சிரிப்பு மருந்து கொடுத்துவர் வடிவேலுதான் என்பதை மறுப்பதற்கில்லை. நீண்ட நாட்களாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த வடிவேலுக்கு அந்த மேடையிலேயே தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வெற்றிக்கூட்டணி

வெற்றிக்கூட்டணி

இந்நிலையில் நடிகர் வடிவேலுவும் நடிகரும் இயக்குருமான பார்த்திபனும் சந்தித்துக்கொண்ட போட்டோவை பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். செந்தில்- கவுன்டர் மணி நகைச்சுவை கூட்டணிக்கு பிறகு வெற்றிக்கூட்டணியாக வலம் வந்த ஜோடி வடிவேலு- பார்த்திபன் கூட்டணி.

நாளைய செய்தியாகலாம்

இவர்கள் இருவரும் ஒன்றாக சந்தித்த போட்டோவை இன்றைய சந்திப்பு.. நாளைய செய்தியாகலாம் என்ற கேப்ஷனோடு வெளியிட்டிருக்கிறார் பார்த்திபன். அதனை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் கூட்டணி மீண்டும் திரையில் தோன்ற வேண்டும் என கெஞ்சாத குறையாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆவலாக உள்ளோம்

இருவரின் போட்டோவையும் பார்த்த இவர், இது எங்களுக்கு மிகவும் பிடித்த பழைய கூட்டணியின் செய்தி... நாங்கள் நாளைய செய்தியில் இதை எதிர்பார்ப்பதை விட நாளைய வெள்ளித்திரையில் காணவே ஆவலாக உள்ளோம்.. நடக்குமா ??? என்று கேட்கிறார்.

மறக்க முடியுமா?

இந்த போட்டோவை பார்த்த இந்த ரசிகர் மறக்க முடியுமா சார் உங்கள் காமெடிய என்று கேட்டியிருக்கிறார்.

பளிச்சினு சொல்லிவிடுங்கள்

குண்டக்க மண்டக்கனு பதில் வரக்கூடாது. நாளைய செய்தியை சும்மா பளிச்சினு சொல்லிவிடுங்கள்? எவ்வளவு காலமாக காத்திருக்கின்றோம் தங்கள் இருவரின் வருகைக்காக,,,, *வாழ்த்துக்கள்* என்று பதிவிட்டிருக்கிறார் இந்த ரசிகர்.

செம க்யூட்டா இருக்கீங்க

பார்த்திபன் சார் உங்களுக்கு வயசே ஆகாதா சார்.. செம க்யூட்டா இருக்கீங்க என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

மண்டக்கன்னா என்ன?

குண்டக்கன்னா என்ன மண்டக்கன்னா என்ன என்று அவர்களின் காமெடியை வைத்து கேட்கிறார் இவர்.

கூட்டணிக்காக வெயிட்டிங்

சார்... இந்த காமெடிலாம் பார்த்து நீங்க சிரிச்சி இருக்கிங்களா...?? பார்த்திபன் சார் + வடிவேலு சார்
உங்களுடைய கூட்டணிக்காக வெயிட்டிங் என்கிறார் இந்த நெட்டிசன்.

மண்டக்கன்னா மண்டக்க

குண்டக்கன்னா குண்டக்க.. மண்டக்கன்னா மண்டக்க..
உங்களின் கூட்டணிக்காக காத்திருக்கிறோம் #தலைவன் வடிவேலு என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

நகைச்சுவை ஸ்க்ரீப்ட்?

அடுத்த நகைச்சுவை ஸ்க்ரிப்ட்டிற்காகவா? இந்த சந்திப்பு என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X