நீங்க பார்த்திபன் மாதிரியே இருப்பீங்களா.. அப்போ இந்த வாய்ப்பு உங்களுக்குத் தான்.. என்னன்னு பாருங்க!
சென்னை: நடிகரும் இயக்குநருமான பார்த்திபனின் அடுத்த படத்தில் நடிக்க சாமானிய நடிகர்களுக்கும் நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
Recommended Video
காஸ்டிங் இயக்குநரை வைத்து எல்லாம் தேர்வு செய்யாமல், வெளிப்படையாக இந்த அறிவிப்பை பார்த்திபன் வெளியிட்டு இருக்கிறார்.
அவரை போலவே உருவ ஒற்றுமை உடைய நபர்கள் 10 வயதில் இருந்து 50 வயது உள்ளவர்கள் இருந்தால், அவர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

ஆஸ்கர் வரை
நடிகர் பார்த்திபன் இயக்கி, அவரே நடித்த, அவர் மட்டுமே நடித்த ஒத்த செருப்பு படம் தமிழ் சினிமாவை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்று சேர்த்தது. ஆனால், பாவம் ஹீரோ அவர் என்பதால், தியேட்டரில் கூட்டமே இல்லாமல், ஒரே வாரத்தில் காட்சிகள் தூக்கப்பட்டன. பின்னர், நெட்பிளிக்ஸில் வெளியான அந்த படத்திற்கு கிடைத்த பாராட்டு அவரை ஆஸ்கர் வரை அந்த ஒத்த செருப்பை தூக்கிக் கொண்டு முயற்சி செய்ய வைத்தது. அங்கேயும் பாராட்டுக்கள் கிடைத்தது கலைக்கு கிடைத்த சிறப்பு.

இரவின் நிழல்
சரி அந்த படத்துக்குத்தான் நமக்கு கொடுத்து வைக்கல.. அடுத்த படத்திலாவது ஆஸ்கர் விருது கிடைத்து விடாதா என்றும் தேசிய விருது வாங்க மாட்டோமா என்றும் நினைத்த நடிகர் பார்த்திபன், சிங்கிள் ஷாட் மூவியாக இரவின் நிழல் படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். ஆனால், அந்த படம் எந்த அளவில் இருக்கிறது என்பது அவருக்குத் தான் வெளிச்சம்.

பார்த்திபன் படத்தில் நடிக்கணுமா?
"நண்பர்களே! அடுத்த படத்தில் நடிக்க என் உருவ அமைப்பை ஒத்த 10 to 50 வயதில் சற்றே அனுபவமுள்ள நடிகர்கள் தேவை!புகைப்படத்துடன் ஒரு நிமிட வீடியோவில் திறமையை பதிவு செய்து அனுப்பவும்.Please விருப்பமுள்ள அனைவரும் முயலாமல், பொருத்தமுள்ளவர்கள் அனுகவும். [email protected]" என நடிகர் பார்த்திபன் ஓப்பன் அழைப்பை விடுத்துள்ளார்.

குவியும் ரசிகர்கள்
அண்ணா நான் நல்லா இருக்கேன்னா.. உங்க படத்துக்கு நான் செட் ஆவேனா.. எனக்கு ஒரு சான்ஸ்.. ஒரே ஒரு சான்ஸ் கொடுங்களேன் ப்ளீஸ் என ஏகப்பட்ட பேர், மெயில் ஐடிக்கு அனுப்புவதற்கு பதிலாக அவரது ட்வீட்டுக்கு கீழே கமெண்ட்டில் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். நிச்சயம் நல்ல நடிகர்களுக்கு பார்த்திபன் வாய்ப்பு கொடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

துக்ளக் தர்பார்
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள துக்ளக் தர்பார் படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளார் நடிகர் பார்த்திபன். விரைவில் அந்த படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் சுயம்பு சிம்பு என அவர் போட்ட மர்ம முடிச்சு காரணமாக மாநாடு படத்திலும் பார்த்திபனுக்கு ஒரு சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











