விஷால் தலைமையில் அவசர செயற்குழு... தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக நடிகர் பார்த்திபன் நியமனம்!
தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக நடிகர் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: விஷால் தலைமையில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில், தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக நடிகர் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு இன்னும் 3 மாதங்களில் தேர்தல் வர இருக்கிறது. இதனால் இப்போதே அந்த சங்கத்தில் சச்சரவுகள் தொடங்கிவிட்டன. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத விஷால் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனக் கூறி எதிர் கோஷ்டியினர் போர்க்கொடி உயர்த்தினர்.

இதையடுத்து அவர்கள் ஒரு அணியாக திரண்டு வந்து தயாரிப்பாளர் சங்கத்தின் திநகர் மற்றும் அண்ணாசாலை அலுவலகங்களை பூட்டு போட்டு மூடினார். இதை திறக்கச் சென்ற விஷாலை போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். தயாரிப்பாளர் சங்கத்துக்கும் சீல் வைக்கப்பட்டது.
நடிகர் விஷால் நீதிமன்றத்தை அணுகி சீல் வைக்கப்பட்ட அலுவலகங்களை மீண்டும் திறந்தார். இதையடுத்து நேற்று தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் விஷால் தலைமையில் நடந்தது. இதில் செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் காலியாக உள்ள துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் பார்த்திபன் நியமிக்கப்பட்டார். இவருக்கு முன்பு அந்த பதவியில் இருந்தவர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











