ஆறுதல் பிச்சைக்கு கை நீட்டாமல்.. நல்லாட்சிக்கு கை நீட்டுவோம்.. நடிகர் பார்த்திபன் ட்வீட்!
சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், வாக்களிக்கப் போகும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் விதமாக நடிகர் பார்த்திபன் தொடர்ந்து தேர்தல் குறித்த ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்.

மறக்காம ஓட்டுப் போடுங்க
வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டு ஆட்சிக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என பல பிரபலங்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இலவசம் பற்றி குட்டி ஸ்டோரி
பெரிய கட்சிகள் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் முதல் இஷ்டத்துக்கு இலவசங்களை வழங்குவதாக அளந்து விட்டுள்ளனர். நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து தேர்தல் தொடர்பான ட்வீட்களையும், மக்களை கவனமாக பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் ட்யூன் செய்து வருகிறார். இலவசம் பற்றி அவர் பதிவிட்டுள்ள குட்டி ஸ்டோரி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிங்கத்தின் சிரிப்பு
நான் ராஜாவாக தேர்வானால் காட்டில் உள்ள அனைவருக்கும் கம்பளி போர்வை இலவசமாக கொடுக்கிறேன் என சிங்கம் ஒன்று கூறியதாகவும், சிங்கத்தை சப்போர்ட் செய்யும் செம்மறி ஆடு ஒன்று, எங்கே இருந்து உங்களுக்கு கம்பளி கிடைக்கும் என சிங்கத்திடம் கேட்க, சிங்கம் சத்தமின்றி சிரித்ததாக ஒரு மெசேஜை போட்டுள்ளார் பார்த்திபன்.

ஆறுதல் பிச்சைக்கு கை நீட்டாமல்
மேலும், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏப்- 1 - ஐ 6-க்கு ஒத்தி வைக்காமல் 'ஆறு"தல் பிச்சைக்கு கை நீட்டாமல் நல்லாட்சிக்கு விரல் நீட்டுவோம், King- maker-ராக!" என தனது பாணியில் ஒரு தேர்தல் கவிதையை எழுதி வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் மற்றும் இலவசங்களை நம்பி ஓட்டுப் போட வேண்டாம் என்றும் நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் என்றும் கோரியுள்ளார்.

பிக் பாஸ் 5க்கு வாங்க
தேர்தலை முன்னிட்டு வாக்களிக்கும் அவசியத்தை எடுத்துக் கூறி வரும் நடிகர் பார்த்திபனிடம் சில பிக் பாஸ் தீவிர ரசிகர்கள், 5வது சீசனை நீங்க தொகுத்து வழங்குனா நல்லா இருக்கும். கமலுக்கு பிறகு திறமையாகவும், சரியாகவும் பேசவும் கண்டிக்கவும் உங்களுக்குத் தான் தெரியும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











