twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முகம், கண்,காது எல்லாம் அப்படியே வீங்கிப்போச்சு..அதுதான் காரணம்… பார்த்திபன் ட்விட் !

    |

    சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் நடிகர் பார்த்திபன் வாக்களிக்கவில்லை.

    வாக்களிக்காதது குறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    வாக்குப்பதிவுக்கு முன்நாள் வாக்களிக்கும் அவசியத்தை வலியுறுத்தி ட்விட்டர் பதிவிட்டு இருந்த நிலையில் அவரே வாக்களிக்காதது சர்ச்சையாகி உள்ளது.

    அஜித், விஜய் ஓட்டு போட்டனர்

    அஜித், விஜய் ஓட்டு போட்டனர்

    தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. திரையுலகை சேர்ந்தவர்கள் காலையிலேயே வந்து ஓட்டு போட்டார்கள். ரஜினி தனியாக வந்து வாக்களித்தார். கமல் தன் மகள்களுடன் வந்தார். அஜித் தன் மனைவியுடன் வந்து வாக்களித்தார். விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன் தன் மனைவியுடன் வந்து வாக்களித்தார்.

    கவனமாக வாக்களிப்போம்

    ஆனால், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் அதாவது ஏப்ரல் 5ந் தேதி ஒரு ட்வீ ட்டை பதிவிட்டு இருந்தார். இதில், ஆறுதல் பிச்சைக்கு கைநீட்டாமல் நல்லாட்சிக்கு விரல் நீட்டுவோம் என்றும், ஐந்தாண்டு கால குத்தகை , பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம் என்று வாக்களிப்பது குறித்து பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று வாக்களிக்கவில்லை இதுகுறித்து இன்று அவரே விளக்கம் அளித்துள்ளார்.

    ஒவ்வாமை ஏற்பட்டது

    இரண்டாம் தவணை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    VOTE - அதுல ஒரு சிக்கல் இருக்கு | SHIVAANGI, MANJIMA | TN Election 2021| Filmibeat Tamil
    அது நேற்றாகிப் போனது

    அது நேற்றாகிப் போனது

    மேலும்,தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions.அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனது என பார்த்திபன் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Parthiban did not vote
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X