உள்ளிருந்தால் உணவு உண்ண நாமிருப்போம் ... இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும்… பார்த்திபன் ட்வீட் !

சென்னை : கொரோனாவின் மிக வேகமாக பரவி வரும் நேரத்தில் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், தனது ட்விட்டர் பக்கத்தில், வீட்டிற்குள் இருக்க வேண்டிய அவசியத்தை அறிவுறுத்தி ட்விட்டர் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இதற்கு ரசிகர் ஒருவரின் கேள்விக்கு மிகவும் சாதுர்யமாக பதில் அளித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவு மிகவும் பரபரப்பாகி வருகிறது.

36,000 பேர்

36,000 பேர்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை சில தளவர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால், தினசரி கொரோனா பாதிப்பு 36000 என்ற அளவிலே பதிவானது.

தளர்வுகளற்ற ழுழு ஊரடங்கு

தளர்வுகளற்ற ழுழு ஊரடங்கு

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தும் கொரோனாவின் தாக்கம் குறையாததால், தற்போது ஒருவார காலம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. கொரோனாவை ஒழிக்க நாம் அனைவரும் வீட்டில் இருப்போம் என்று பல திரைப்பிரபலங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

உணவு யார் தருவார்கள்

உணவு யார் தருவார்கள்

இந்நிலையில், நடிகர் பார்த்திபன், கொரோனா சங்கிலியை உடைக்க வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி ட்விட்டர் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், நாளை சிரிக்க... சிறக்க இன்று உள்ளிருப்போம் உறவே என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ரசிகர் ஒருவர், உள்ளிருந்தால் உணவு யார் தருவார்கள் என்ற கேள்வியை கேட்டுள்ளார்.

நம்மை மண்ணுன்னும்

நம்மை மண்ணுன்னும்

இதற்கும் பதிலளித்துள்ள பார்த்திபன், சரியான செருப்படிக் கேள்வி. கொரோனாவை குறைவான மிருகமாக்கிவிடுகிறது பசி. இருந்தாலும் உள் இருந்தா ... உணவை உண்ண நாமிருப்போம் -நாளை! இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும் என்றுபதிவிட்டுள்ளார். இவரின் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X