Parthiban: யானை பலத்துடன் மிரட்டுகிறார்கள்.. ஜிகர்தண்டா XX குறித்து பாராட்டிய பார்த்திபன்!

சென்னை: நடிகர்கள் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜிகர்தண்டா XX படம் நேற்றைய தினம் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது.

இந்தப் படம் 8 ஆண்டுகள் கழித்து ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகமாக வெளியாகியுள்ளது. படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

Actor Parthiban hails Jigarthanda XX movie in his twitter page

பிரபலங்களின் பாராட்டுக்களுக்கும் ஜிகர்தண்டா XX படம் உள்ளாகியுள்ளது. தனுஷ், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஜிகர்தண்டா XX படம்: நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜிகர்தண்டா XX படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகமாக தற்போது ஜிகர்தண்டா XX படம் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்திலும் ஸ்கோர் செய்துள்ளார்.

கருப்பு ஹீரோ கேரக்டர்: நேற்றைய தினம் வெளியாகியுள்ள ஜிகர்தண்டா XX படம் 1973 காலகட்டத்தையொட்டிய கதைக்களத்தில் பயணம் செய்கிறது. மதுரையின் பிரபல ரௌடியான ராகவா லாரன்சிற்கு தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோவாகும் ஆசை வருவதை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. சினிமா என்ற ஆயுதம் லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யாவின் வாழ்க்கையில் செய்யும் மாற்றமும் இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ளது.

மிகையில்லாத நடிப்பு: இந்தப் படத்தில் மிகையில்லாத நடிப்பை எஸ்ஜே சூர்யா கொடுத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் படத்தில் மலையரசியாக லாரன்சின் மனைவியாக நடித்துள்ள நிமிஷாவின் நடிப்பு வரவேற்பை பெற்றுள்ளது. இளவரசு, சத்யன் என அனைத்து கேரக்டர்களும் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்கு பலத்தை கொடுத்துள்ள போதிலும் க்ளைமாக்சில் வரும் பாடல் பொறுமையை சோதிப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

Actor Parthiban hails Jigarthanda XX movie in his twitter page

யானை பலத்துடன் மிரட்டல்: ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் க்ளைமாக்சில் பட்டையை கிளப்பியுள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து நடிகர் தனுஷ் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்த நிலையில், தற்போது பார்த்திபனும் படத்தில் பலரும் யானை பலத்துடன் மிரட்டுவதாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, சந்தோஷ் நாராயணன், திரு, கதிரேசன், நாயகி உள்ளிட்ட அனைவரும் நம் கண்களில் நீர் சுரக்க நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தீபாவளி பட்டாசான கைத்தட்டல்கள்: பெரும்பாலான காட்சிகளில் கரைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். என்றாவது ஒருநாள் ஜிகர்தண்டா 3 படம் FDFS பார்த்தேன் என்று தான் பதிவிடுவேன் என்றும் அதற்கு காரணம் ஜிகர்தண்டா 2 படம் என்றும் அவர் மேலும் பாராட்டியுள்ளார். படம் நினைத்தபடியே மனதை உலுக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார். ஜிகர்தண்டா 1 தான் நடித்திருக்க வேண்டிய படம் என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். தியேட்டரில் வெடித்த கைத்தட்டல்களை தீபாவளி பட்டாசாக ரசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X