நீடித்த உறவுக்கு.. தற்காலிக விலகல் உகந்தது.. ஃபிளையிங் கிஸ் அலௌட்.. கோவிட்டிலும் நடிகர் குசும்பு!
சென்னை: கொரோனா வைரஸால் உலகமே திக்குமுக்காடி வரும் நிலையில் நடிகர் பார்த்திபன் தனது ஸ்டைய்ல ஒரு விழிப்புணர்வு பதிவிவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸால் உலகம் முழுக்க இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 19 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் வல்லரசு நாடுகளே செய்வதறியாது திகைத்து வருகிறது.

ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சமூக விலகளை ஒவ்வொரு நாடும் அறிவுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அசுர வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் கடைசி நாளான இன்று ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழில்கள் முடக்கம்
வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் திரைத்துறை உட்பட அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளது. வீட்டில் உள்ள நடிகர் நடிகைகள் சோஷியல் டிஸ்டன்ஸை வலியுறுத்தியும் வெளியில் செல்லும்போதும் சென்று திரும்பிய பிறகும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
எம் மக்காள்..
அந்த வகையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபனும் அவ்வப்போது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். அதன்படி கடந்த 11ஆம் தேதி எம் மக்காள்.. ஊரடங்கு சட்டத்திற்கு கட்டுப்பட்டு (extended)- உலகடங்கா நோயிலிருந்து விடுபட்டு-மன ஆரோக்கியமும் பண ஆரோக்யமும் செழித்து,அன்றாடம் உழைப்பவர் வாழ்வில் கூட மகிழ்ச்சி நின்றாட விரைவில் நாம்...கொண்டாடுவோம்! அதுவரை அமைதி காப்போம் அடுத்தவருக்கு நம்பிக்கையாகி மனிதம் வளர்போம் என பவிட்டிருந்தார்.
விலகல் உவந்தது!
இந்நிலையில் இன்று நீடித்த உறவுக்கு.. தற்காலிக விலகல் உகந்தது! பறக்கும் முத்தம் அனுமதிக்கப்பட்டது! என்று பதிவிட்டுள்ளார். அதனுடன் சோஷியல் டிஸ்டன்ஸை வலியுறுத்தும் வகையில் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். நெருக்கமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் முட்டை ஒரு பந்து விழுந்து கொலாப்ஸாவதும் கேப் விட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் முட்டை பாதுகாப்பாக இருப்பதாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications











