இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா.. வாயில் விளையாடிய பார்த்திபன்.. விஜய் "சேது" பதி கப்சிப்!

சென்னை: நடிகர் பார்த்திபன், விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படம் குறித்து டிவிட்டியுள்ளார்.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் துக்ளக் தர்பார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

படத்தில் நடிகை மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் இதன் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதில் இரண்டு விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

50 சதவீதம்

50 சதவீதம்

இதனால் விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. இந்தப் படம் அரசியலை மையப்படுத்தி உருவாகி வருவதாக தெரிகிறது.
இதன் படப்பிடிப்பு சுமார் 50 சதவீதம் முடிந்துள்ளதாக தெரிகிறது.

கான்வெர்சேஷன்

கான்வெர்சேஷன்

இந்நிலையில் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படம் குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனக்கே உரிய ஸ்டைலில் டிவிட்டியுள்ளார். நானும் ரவுடிதான் படத்தில் பார்த்திபனும், விஜய் சேதுபதியும் பேசிக்கொள்வது போன்று ஒரு கான்வெர்சேஷனை ஷேர் செய்துள்ளார்.

மாஸ்டர் பிளான் என்ன?

மாஸ்டர் பிளான் என்ன?

அதாவது, "பார்த்திபன்:நானும் ரவுடிதான்,நீயும் ரவுடிதான்.இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு"இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா"ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்?
உன் MASTER plan தான் என்ன?" என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவுக்கு பிறகு

கொரோனாவுக்கு பிறகு

நடிகர் விஜய் சேதுபதி, மாமனிதன்', 'லாபம்', 'கடைசி விவசாயி', 'க/பெ ரணசிங்கம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', ஆகிய படங்களில் நடித்து வருகிறார். துக்ளக் தர்பார் படத்தின் எஞ்சிய 50 சதவீத படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு தொடங்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X