twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கேரளாவில் உள்ளம் பதறும் வெள்ளம்... நாமாய் உதவி செய்ய வாருங்கள்': பார்த்திபன்!

    கேரளாவுக்கு உதவிசெய்ய நடிகர் பார்த்திபன் அழைப்பு விடுத்துள்ளார்.

    |

    Recommended Video

    கேரளாவில் உள்ளம் பதறும் வெள்ளம்... உதவ சொல்லும் பார்த்திபன்!- வீடியோ

    சென்னை: கேரள மாநிலத்திற்கு நாம் சேர்ந்து உதவுவோம் என நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    வரலாறு காணாத மழை கேரளாவில் கொட்டி தீர்த்து வருகிறது. மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 58 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. 300 க்கும் மேற்பட்டோர் காணவில்லை.

    Actor Parthiban helps Kerala

    2 வாரங்களாக பேரிடர் மீட்புக் குழுவும், ராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபட்டும் ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். இடுக்கி, கொல்லம், கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், கொச்சி ஆகிய மாவட்டங்களில் மேலும் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

    இந்த நிலையில், பல பிரபலங்கள் கேரளாவிற்கு உதவிகள் செய்ய முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து தன்னார்வளர்களும், தொண்டு நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து நடிகர் பார்த்திபன் டிவிட்டரில் கூறியிருப்பதாவது, "94 வருடங்களுக்கு பிறகு கேரளாவில் உள்ளம் பதறும் வெள்ளம். நானும் நீங்களும் உதவி செய்திருந்தாலும், நாமாய் செய்ய விரும்பினால் 044 43523255 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். இணைந்து துயர்துடைப்போம் என ட்வீட் செய்துள்ளார். காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை தொடர்புகொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    As per report 40 people have died and more than 300 people are missing in massive Kerala flood. Actor Parthiban come forward to help. He have given a contact no to join hands. You can dial 044 435232255 and contribute.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X